குரங்குகளுடன் நெருங்கிப் பழகும் ஒன்றரை வயதுச் சிறுவன் (Video)

கர்நாடக மாநிலத்தில் ஒன்றரை வயது சிறுவன் குரங்குகளுடன் நட்பாகப் பழகி வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் விளையாட்டுத் தோழர்கள் குரங்குகள்தான். காலை 6 மணிக்குக் குரங்குகள்தான் அவனை உறக்கத்திலிருந்து எழுப்புகின்றன. அவன் குரங்குகளுக்குத் தினமும் உணவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான்.

அவற்றுடன் பொழுதைக் கழிக்கிறான். குரங்குக் கூட்டத்தின் நடுவே அவன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் குரங்குகளுடன் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறான் அவன்.

இதுகுறித்து அவனுடைய தாயார் கூறுகையில், “முதலில் அவன் குரங்குகளுடன் இருக்கும்போது பயமாக இருந்தது. ஆனால், குரங்குகள் அவனிடம் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன. அவன் குறும்புத்தனம் செய்தாலும் அவை அவனை பதிலுக்குத் தாக்குவதோ, கடிப்பதோ இல்லை. அவன் தினமும் குரங்குகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். குரங்குகளுக்கு உணவிட அவனுக்கு உதவி செய்கிறோம்” என்று அவனுடைய தாயார் தெரிவித்தார்.

Total Page Visits: 87 - Today Page Visits: 1