ஒரு மணி நேரத்தில் ஏழு இலட்சம் லைக்குகளை அள்ளிய புகைப்படம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ஒரு மணிநேரத்தில் 7 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

கோலி, தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண விழாவில் பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த மாதம் (டிசம்பர் ) 26ஆம் தேதி மும்பையில் இவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற்ற செய்தி வெளியானதிலிருந்து இருவருக்கும் பல்வேறு திரைப்படப் பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றினை இன்று (டிசம்பர் 15) பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் அவர்கள் ஐரோப்பாவில் உள்ள பனிப் பிரதேசத்தில் உள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்தினாலும், எந்த இடத்தில் உள்ளனர் என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 7 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.

Total Page Visits: 103 - Today Page Visits: 3