அணில் அமெரிக்கப் பொலிஸாரால் கைது: நடந்தது என்ன? (Video)

குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போலீசார் தண்டனையும் பெற்றுத் தருகின்றனர்.

ஆனால் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அணில் ஒன்றை கைது செய்த போலீசார் அதை சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.

கைது செய்யும் அளவுக்கு அணில் என்ன குற்றம் செய்தது? அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அணில் கடித்து சேதப்படுத்தி விட்டது.

இதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் பல மின் விளக்குகள் எரியவில்லை.

எனவே அந்த அணிலை நியூஜெர்சி போலீசார் தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பெருமையாக வெளியிட்டனர். ஆனால் சில மணி நேரத்திலேயே அது ஜாமீனில் விடப்பட்டது. அதன் பிறகு போலீசார் அந்த அணிலை பார்க்கவில்லை.

Total Page Visits: 108 - Today Page Visits: 3