சன் மியூசிக் மணிமேகலை குடும்ப எதிர்ப்புகளுடன் ஹுசைனைத் திருமணம் செய்தார் !

சன் மியூசிக்கில் பிரபலமான VJக்களுள் ஒருவர் மணிமேகலை. இவருக்கென்று ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் இவரின் நெருங்கிய நண்பரான ஹுசைனுக்கும் சென்னையில் நண்பர்கள் மற்றும் ஹுசைனின் உறவினர்கள் முன்னிலையில் இன்று ரிஜிஸ்டர் மேரேஜ் நடைபெற்றுள்ளது.

அவரது ட்விட்டரில், ”எவ்வளவு போராடியும் என்னுடைய தந்தையின் மனதை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் என்னுடைய குடும்பத்தை எதிர்த்து இன்று என் காதலனை கரம் பிடித்துள்ளேன். என்றைக்காவது ஒருநாள் என்னுடைய அப்பா எங்களை ஏற்றுக் கொள்வார்” எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மணிமேகலையிடம் பேசியபோது, ”நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டோட சம்மதத்துக்காக ரொம்ப நாள் போராடினோம். திடீர்னு முடிவு பண்ணி இன்னைக்கு நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். கொஞ்ச நாளிலேயே என்னுடைய அப்பா எங்களை புரிஞ்சிப்பாங்கனு நம்புறேன்” என்றார்.

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, இன்று (டிசம்பர் 6) பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை கூறியிருப்பதாவது: நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். இது ஓர் அதிரடி பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன். காதலுக்கு மதமே இல்லை. லவ் யு ஹுசைன். ஸ்ரீராமஜெயம், அல்லா.
இவ்வாறு மணிமேகலை தெரிவித்திருக்கிறார்.

சன் மியூசிக் மணிமேகலையின் அழகிய புகைப்படம் .

Total Page Visits: 133 - Today Page Visits: 2