வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் – video

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பள்ளி மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியரின் வீடியொ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், தமோ என்னும் கிராமத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் - video

இந்நிலையில், அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரின் முதுகில் மாணவர் ஒருவர் ஏறி நின்று மசாஜ் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தங்கள் பிள்ளைகளை ஆசிரியர் மசாஜ் செய்ய சொல்லித் துன்புறுத்துவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேச பள்ளி கல்வித் துறை அமைச்சர் தீபக் ஜோஷி நேற்று (டிசம்பர் 22) தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். வீடியோ காட்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் - video

தனக்கு அதீத முதுகு வலி இருந்ததால், மாணவரை மசாஜ் செய்ய சொல்லியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் விளக்கமளித்துள்ளார். ஆனால், ஆசிரியர் தங்களை மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர் - video

கடந்த ஆகஸ்ட் மாதம், சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களை மசாஜ் செய்ய வைத்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நினைவுகூரத்தக்கது.