உங்கள் இன்றைய ராசி பலன்-02/12/2017

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பம் சம்பந்தமான சில பிரச்சினைகள் குடும்பத்தில் அமைதி மற்றும் ஆரோக்கிய சூழ்நிலையைக் கெடுக்கும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை இன்று புரிந்து கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் – குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. அலுவலக டென்சனை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். அது குடும்ப மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும். அலுவலகத்திலேயே அதை தீர்த்துவிட்டு, வீட்டில் குடும்ப வாழ்வை அனுபவிப்பது நல்லது. இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேகம் வரக்கூடும். இதனால் நீங்கள் வருத்தமடையலாம்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் – நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் – அது உங்களுக்கு நல்லதை செய்யும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

 

சிம்மம் ராசிபலன்:

முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் – யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் – அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

 

துலாம் ராசிபலன்:

குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். ஊகங்கள் பேரழிவாக அமையும் – எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் துணைக்கு உங்கள் அக்கரை தேவை இதனால் வீட்டில் சில ப்ரச்சனைகளை சந்திக்கலாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது – உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப டென்சனை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவசியமில்லாமல் கவலைப்படுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும். முடிந்த வரையில் சீக்கிரமாக மற்றவர்களின் உதவியுடன் அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அழுத்தத்தை எதிர்கொள்ள உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

 

தனுசு ராசிபலன்:

விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று பேரின்பம் பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும்.

 

மகரம் ராசிபலன்:

மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் – குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் – நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள்.

 

கும்பம் ராசிபலன்:

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஊகங்கள் பேரழிவாக அமையும் – எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

எடையில் ஒரு கண் இருக்கட்டும். அதிகம் சாப்பிடாதீர்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் திருமண வாழ்வில் கடினமான நாள். அதனால் கவனம் தேவை.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

Total Page Visits: 68 - Today Page Visits: 2