உங்கள் இன்றைய ராசி பலன்-03/12/2017

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை பிட்டாக வைத்திடுங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். காதலரின் முந்தைய கருத்து வேறுபாட்டை நீங்கள் மன்னிப்பதன் மூலம் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிக் கொள்வீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்று ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.

 

மிதுனம் ராசிபலன்:

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் புதிய நட்புகள் உருவாகும். உங்களுக்கு பிடித்தவரை சந்தித்தபிறகு வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்தும் நாளிது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். வாழ்க்கையே இனிமையாகும் நல்ல துணை அமைந்தால், அந்த பெருமகிழ்சியில் நீங்கள் இன்று மூழகி விடுவீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

வானிலையால் சிறிது மோசமாக உணரலாம் – கடந்த சில நாட்களாக அதிக வேலை இருந்ததால் நீங்கள் களைப்பாகி சக்தியிழந்து இருப்பீர்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணையின் மூசமான மூடும் உடல் நிலையும் உங்கள் நாளை பாதிக்க கூடும்.

 

சிம்மம் ராசிபலன்:

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். மற்றவர்கள் மீது உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் – மோதல்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். இன்று உங்கள் மண வாழ்வின் மிக வண்ணமயமான நாள்.

 

கன்னி ராசிபலன்:

பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். வீட்டில் இணக்கத்தை ஏற்படுத்த நெருக்கமான ஒத்துழைப்பாக செயல்படுங்கள். பெண் நண்பர் உங்களை ஏமாற்றக் கூடும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் துணை தன் நன்பர்களுடன் பிசியாக இருக்க கூடும். இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்

 

 

விருச்சிகம் ராசிபலன்:

நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் நீங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட நல்ல நேரங்களை நினைவுபடுத்துவதன் மூலம் நட்பை புதுப்பித்துக் கொள்வதற்கான நேரம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

திறந்து வைத்திருக்கும் உணவை சாப்பிடாதீர்கள், அது நோயை வரவழைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

வாயுக் கோளாறு உள்ள நோயாளிகள் எண்ணெய் உள்ள மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். அது நோயை அதிகரிக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உங்களைப் போன்ற அதே சிந்தனை உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த உதவும் செயல்களில் நீங்கள் ஈடுபாடு காட்ட வேண்டும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். காதல், முத்தங்கள், அன்பான அணைப்பு, குதூகலம் இப்படி இன்று நாள் முழுக்க உங்கள் வாழ்க்கை துணையுடன் ரொமான்ஸ் தான்.

 

கும்பம் ராசிபலன்:

சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். தேவைப்பட்டால் நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது. மனிதனின் செயல்கள் ஒலியின் அலைகளைப் போன்றவை. அது மெலோடியாகவோ அல்லது கொடூரமான சப்தமாகவோ எதிரொலியாக திரும்பி வரும். நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பெறுவோம். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். மாலையில் குழந்தையுடன் சிறிது நேரத்தை இனிமையாகக் கழித்திடுங்கள். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் வாழ்க்கை துணை இன்று கூடுதலாக உங்களுடன் நேரத்தை செலவழிப்பார்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

Total Page Visits: 72 - Today Page Visits: 1