உங்கள் இன்றைய ராசி பலன்-06/12/2017

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

மந்தமாகி மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடாதீர்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். உபரியாக கிடைத்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள் – அதற்காக வழக்கத்தைவிட கொஞ்சம் மாறியும்கூட போகலாம். அன்புக்குரியவரிடம் காதலைப் உணரச் செய்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்று ஆபீசில் நடக்கும் ஒரு ப்ரச்சினையில் தேவையில்லாமல் நீங்கள் தான் அதற்கு காரணம் என்பது போல மாட்டிக்கொள்ள கூடும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவர். ஆனால் உங்களிடம் ஏதாவதுஉதவியை எதிர்பார்ப்பார்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். கோபத்தினால் சந்தேகம் தோன்றலாம் ஆனல் அது தவறென்று உங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் பந்தத்தின் மேல் சந்தேகம் தோன்றக்கூடும்.

 

மிதுனம் ராசிபலன்:

இன்று உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள் – உடல் சக்தி குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக உங்களுக்கு சிறிது ஓய்வு தேவை. பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். வீட்டுவேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். அதேசமயத்தில் தொடர்ந்து வேகமாக செயல்படவும் உடலுக்கு ரீசார்ஜ் செய்யவும் பொழுதுபோக்கு விஷயங்களிலும் சிறிது நேரத்தை செலவிடுங்கள். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

 

சிம்மம் ராசிபலன்:

மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். துணைவரும் குழந்தைகளும் கூடுதல் அன்பையும் அக்கறையையும் தருவார்கள். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் நம்பியவர் உங்களிடம் மிக நேர்மையாக இல்லை என்பதை அறியும்போது இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல் முக்கியமான வேலைகளை நீங்கள் கையாள முடியும் என்று கருதினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். சுவையான உணவு, ரொமான்டிக்கான தருணங்கள் இதனை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஊறாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உடனடியாக உங்களைக் கொல்கிறது – வாழ்வில் ஆனந்தத்தை கெடுத்து திறமையை பாதிக்கிறது – எனவே உங்களை கோழையாக ஆக்கிவிடுவதற்கு முன்பு, முளையிலேயே கிள்ளிவிடுங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். எதிர்பாராத பொறுப்புகள் இன்றைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் – உங்களுக்காக செய்வதை விடவும் பிறருக்காக நிறைய செய்வதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ரொமான்சுக்கு உற்சாகமான நாள் – மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள், அதை முடிந்தவரை ரொமாண்டிக்காக ஆக்கிட முயற்சி செய்யுங்கள். திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள் – அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் – உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவியை நச்சரிப்பதை தவிர்த்திடுங்கள். நச்சரிப்பது நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பற்ற கருத்துகளுக்கும் இடமளிக்கும் – அது இருவரையும் தேவையில்லாமல் உமர்வுபூர்வமாக காயப்படுத்தும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால் – நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். ஆபீசில், இன்று நீங்கள் கூறுவதை அனைவரும் மிக நல்ல முறையில் கேட்பார்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.

 

தனுசு ராசிபலன்:

வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். பங்குதாரர் வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் எழுத்துமூலமாக பதிவு செய்யுங்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.

 

மகரம் ராசிபலன்:

பழைய நண்பரை மீண்டும் காண்பது உங்கள் எண்ணங்களை பிரகாசமாக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். காதலுக்கு உரியவர்களுடன் உறவை பாதிக்கும் ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் நீங்கள் சிறந்தவர்கள். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். ஆபீசில் உங்களை வெறுப்பவர்கள் கோபமூட்டலாம் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவே கவலையை விடுங்கள்.. நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.

 

கும்பம் ராசிபலன்:

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்து நண்பர்கள் நல்ல அறிவுறை வழங்குவார்கள். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். உங்கள் வேலையிலும், முன்னுரிமை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். கண்டிப்பான போக்கு, குறிப்பாக நண்பர்கள் வட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும். உறவுகள் துண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அது மோசமான விளைவை ஏற்படுத்தலாம். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் – எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

§

Total Page Visits: 70 - Today Page Visits: 1