உங்கள் இன்றைய ராசி பலன்-08/12/2017

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்ப டென்சனை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவசியமில்லாமல் கவலைப்படுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும். முடிந்த வரையில் சீக்கிரமாக மற்றவர்களின் உதவியுடன் அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அழுத்தத்தை எதிர்கொள்ள உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஒருதலை மோகம் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் அண்டை வீட்டார் உங்களை பற்றி உறவினர்களிடம் தவறாக கூறக்கூடும்..

 

ரிஷபம் ராசிபலன்:

அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார். டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்களுடைய குறுகிய மனப் போக்கால், எந்த முன்னேற்றமும் காண முடியாமல் இருப்பீர்கள். கவலைதான் உங்கள் சிந்தனை சக்தியை குறைத்துவிட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். பிரகாசமான பக்கம் பாருங்கள். உங்கள் முடிவில் நிச்சயமான மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் – ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். இன்று நண்பர் பக்கத்தில் இல்லாததால் அதன் அருமையை உணர்வீர்கள். இன்று அபீசில் அதிக அன்பினை னீங்கள் உணர முடியும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

 

கடகம் ராசிபலன்:

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் – இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம்தான் இருக்கும் காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.

 

சிம்மம் ராசிபலன்:

இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்களை மகிழ்விக்க, குழந்தைகள் தங்களால் ஆனதைச் செய்வார்கள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் – உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். இந்த நாள் வசந்த காலத்தை போன்றது. நீங்கள் இருவர் மட்டுமே ரொமாந்ஸில் உலகையே மறக்கும் நாள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். காதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.

 

துலாம் ராசிபலன்:

மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் – உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். சில தவறான புரிதல் காரணமாக காதலருடனான உறவு இன்று பாதிக்கப்படலாம். காதல் என்பது முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆபீசில், இன்று நீங்கள் கூறுவதை அனைவரும் மிக நல்ல முறையில் கேட்பார்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விஷயத்தை உங்கள் துணை இன்று உங்களிடம் சொல்லக்கூடும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஊகங்கள் பேரழிவாக அமையும் – எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது.

 

தனுசு ராசிபலன்:

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.

 

மகரம் ராசிபலன்:

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா இருக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு உதவுங்கள். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். உங்களின் நம்பிக்கை, தொழில் வாழ்வில் நல்ல பலனை ஏற்படுத்தும். உங்கள் கருத்துகளை மற்றவர்கள் ஏற்கும்படி செய்ய அந்த நம்பிக்கை உதவும். அதனால் அவர்களின் உதவி கிடைக்கும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் – உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். இன்று, திருமண பந்த்த்தின் அருமையை பல விதத்திலும் உணருவீர்கள்.

 

கும்பம் ராசிபலன்:

சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். உங்களின் ஒத்துழைக்கும் போக்கு மற்றும் அலசிப் பார்க்கும் திறன்கள் கவனிக்கப்படும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவியை நச்சரிப்பதை தவிர்த்திடுங்கள். நச்சரிப்பது நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பற்ற கருத்துகளுக்கும் இடமளிக்கும் – அது இருவரையும் தேவையில்லாமல் உமர்வுபூர்வமாக காயப்படுத்தும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். காதலில் இறக்கங்களை எதிர்கொள்ள தைரியத்துடனும் உற்சாகமாகவும் இருங்கள். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் துணையுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் மாலையில் சமாதனம் ஆகி விடுவீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

§

Total Page Visits: 68 - Today Page Visits: 2