உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017தியானமும், தம்மை அறிதலும் பலன் தரும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017துறவு நிலையில் உள்ள ஒருவரின் தெய்வீக சிந்தனை உங்களுக்கு ஆறுதலையும் சவுகரியத்தையும் கொடுக்கும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியலை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதைப் புறக்கணித்தால் பின்னர் தொந்தரவு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உங்களை மகிழ்விக்க, குழந்தைகள் தங்களால் ஆனதைச் செய்வார்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. வேலையில் தொழில் செய்யும் போக்கு உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

இன்று களைப்பாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று மோசமான மூடில் இருப்பது போல் தெரிகிறது.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். பார்ட்னரை கையாள்வது கஷ்டமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். சொத்து பிரச்சினைகள் ஏற்படலாம். சாத்தியமானால் சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். சட்டபூர்வமாக தலையிடுவது ஆதாயம் தராமல் போகலாம். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

சில விளையாட்டுகள் விளையாடுவதில் ஈடுபாடு காட்டுங்கள். அதுதான் நீடித்த இளமையின் ரகசியம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் சந்ததிக்காக திட்டமிட அருமையான நாள் உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். இன்று உங்கள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு வேலை செய்யாவிட்டால் தவறுகள் நேரக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017அளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். நன்றி கூறுவது வாழ்வில் அன்புநிலையை மேம்படுத்தும். நன்றி கெட்டத்தனம் அதை கெடுத்துவிடும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும். இது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

சாலையைக் கடக்கும்போது, குறிப்பாக சிவப்பு விளக்கு எரியும்போது கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக்குறைவு உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உறவினர்களுடன் செலவிடும் நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று, மனதுக்கினியவருடன் பொழுதை கழிப்பது எத்தனை இன்பமானது என்பதை அறிவீர்கள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-21/12/2017

மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். இவ்வளவு நால் நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டமென இத்தனை நாள் தட்டிக் கழித்து வந்தீர்களோ அதனை இன்று செய்ய நேரும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். நெடுங்காலத்துக்கு பிறகு உங்கள் துணை உங்களுடன் சண்டை பூசல் இன்றி அமைதியாக பொழ்தை கழிப்பார்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )