உங்கள் இன்றைய ராசி பலன்-22/12/2017

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் – எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். குடும்பத்தினர் நிறைய தேவையில் இருப்பார்கள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். புதிய ஐடியாக்கள் பயன்தரும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

 

மிதுனம் ராசிபலன்:

தகராறு செய்யும் உங்கள் நடத்தையால் பகைவர்களின் பட்டியல் நீளும். நீங்கள் பின்னர் வருந்தக் கூடிய அளவுக்கு மற்றவர்கள் கோபம் கொள்ளாதிருக்கட்டும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் – அது அமைதியைக் கெடுக்கும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை உங்கள் மேல் சந்தேகம் கொள்ளும்படியான சூழல் இன்று அமையக்கூடும்.ஆனால் இறுதியில் உங்கள் துணைவர்/துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார்.

 

கடகம் ராசிபலன்:

நல்ல ஆரோக்கியம் இருந்தால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். வேலையில் நீங்கள் அதிகம் கவனமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். அதிக வேலை அழுத்தம் இன்று ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். திருமண வாழ்வை பொருத்த வரையில் இன்று மிக சிறந்த நாள்.

 

சிம்மம் ராசிபலன்:

குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

 

கன்னி ராசிபலன்:

உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்கள் பணத்தைக் கையாள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுமதிக்காதீர்கள் அல்லது நீங்கள் உங்கள் சீக்கிரத்திலேயே பட்ஜெட்டை தாண்டிவிடுவீர்கள். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. பொதுவாக நீங்கள் செய்வதைவிட அதிகமான நோக்கத்தை இன்று நிர்ணயித்துக் கொள்வீர்கள் – உங்கள் எதிர்பார்ப்பின்படி ரிசல்ட் வராவிட்டால் ஏமாற்றத்துக்கு ஆளாகாதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. சிலருக்கு அழகிய பரிசுகளும் பூங்கொத்துகளும் நிறைந்த ரொமாண்டிக்கான மாலைப் பொழுது அமையும். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

ஒரு நண்பருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு முன்கோபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற டென்சனைத் தவிர்க்க, உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் சேர்ந்து வாழும் ஒருவர் உங்களின் தற்செயலான அனுமானிக்க முடியாத நடத்தையால் வெறுப்பாகி அப்செட் ஆவார். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

 

மகரம் ராசிபலன்:

அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்ப கடமைகளை மறந்துவிடாதீர்கள். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

 

கும்பம் ராசிபலன்:

சிலர் உங்கள் மனநிலையை அப்செட் ஆக்கலாம். ஆனால் இந்த கவலை உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். தேவையற்ற இந்தக் கவலைகளும் வருத்தங்களும் உங்கள் உடலில் தாழ்வு பாதிப்பை ஏற்படுத்தும், தோல் பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள். அன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள். சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்களின் பாசிடிவான அணுகுமுறை உங்களை சுற்றியுள்ளவர்களை ஈர்த்திடும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் இன்று திருமண வாழ்வை பாதித்துவிடும். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )

Total Page Visits: 79 - Today Page Visits: 5