விஷால் மனு ஏற்பு: பரபரப்பு நிமிடங்கள் (Video)

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. தனது பக்கம் நியாயம் உள்ளது. நீதி நேர்மை வென்றது என விஷால் பேட்டி அளித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் நடிகர் விஷால் திடீரென தேர்தலில் போட்டியிட்டார். நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை மோட்டார் சைக்கிளில் சக நடிகர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து விஷால் மனுத்தாக்கல் செய்தார்.

விஷால் மனு ஏற்பு: பரபரப்பு நிமிடங்கள் (Video)

இந்நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. ஆரம்பத்திலேயே மருது கணேஷ், தினகரன், மதுசூதனன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் விஷாலின் மனுவை ஏற்றுக்கொள்வதில் திமுக, அதிமுக முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனால் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி இரண்டரை மணி நேரமாக நிறுத்தி வைத்திருந்தார். வேட்பு மனுவை தொகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் முன் மொழிய வேண்டும். அதில் இரண்டு நபர்கள் பெயர், விபரங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாக தெரிவித்து திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதையடுத்து தேர்தல் அலுவலகத்துக்கு வந்த விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் காவல் அதிகாரிகள் அவரை தேர்தல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர். அங்கு விஷால் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்தார். ஆடியோ ஒன்றையும் அளித்த அவர் தனது ஆதரவாளர்கள் 10 பேர் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

யார் பின்னால் நின்று எதிர்க்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை: விஷால் அதிரடி

நேர்மை நீதி நியாயம் ஜெயித்தது, என்னுடைய நாமினேஷன் ஏற்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், யார் பின்னால் நின்று எதிர்க்கிறார்கள் என்று கவலைப்பட போவதில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் மனு ஏற்பு: பரபரப்பு நிமிடங்கள் (Video)

இது குறித்து விஷால் இன்று அளித்த பேட்டி:

“நேர்மை நீதி நியாயம் ஜெயித்தது, என்னுடைய நாமினேஷன் ஏற்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நியாயமாக எதை செய்ய வேண்டுமோ அதை தேர்தல் கமிஷன் செய்தது. அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வேறு ஒருவர் கையெழுத்து என்று புகார் வந்தது. அதற்கான விசாரணை நடந்து உண்மை வெளியானது. ஒரு விஷயத்தை சொல்கிறேன் ஆடியோ ஒன்று வெளிவந்தது, அந்த ஆடியோ உண்மைதான். யார் எதிர்க்கிறார்கள், யார் ஓரங்கட்டப்பார்க்கிறார்கள், யார் பின்னால் இருக்கிறார்கள் என்று அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை.

தேர்தலை நேர்மையாக சந்திக்க உள்ளேன். நிச்சயம் வெற்றி பெருவேன். எனக்காக முகம் தெரியாமல் போராடிய சுயேச்சை வேட்பாளர் கலை என்பவருக்கும், முகம் தெரியாமல் எனக்காக பரிந்து பேசி, விஷால் சரியான நபர்தான் என்று எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.”

இவ்வாறு விஷால் பேட்டி அளித்தார்.