இன்று பூரண சந்திர கிரகணம்..! என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது, இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.இன்று 31/01/2018 அன்றுசந்திரகிரகணம் ஏற்படவுள்ளநிலையில் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என இங்கு கூறப்பட்டுள்ளது.கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலயதரிசனம் கூடாது.செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப்போட்டு வைக்க வேண்டும்.

கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.கிரகண விடுபடும்போது அதாவது கிரகணம் முழுதும்முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலயதரிசனம் மேற்கொள்ள வேண்டும்.ஆலயதரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகேஉணவு உட்கொள்ள வேண்டும்.சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.

ஜனவரி 31

இன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 150 ஆண்டுகளுக்குப் பின்னர் வானத்தில் நிகழ உள்ள அபூர்வ நிகழ்வாகும். கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம். சூரியன் மற்றும் சந்திரனுக்கு நடுவில் பூமி வருவதும், இதனால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதும் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 31ஆம் தேதியன்று சந்திரன் சிவப்பாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இது ரத்த நிலவு (ப்ளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது.குழந்தைகள், கர்ப்பினிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும்.

தோஷமுள்ள நட்சத்திரங்கள்

கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். சந்திர கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி.

கர்ப்பிணி பெண்களே கவனம்

கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கர்ப்பிணி பெண்களை பெரிதும் பாதிக்கும் சந்திர கிரகணம்

யாகங்கள் செய்யலாம்

ஜனவரி 31ஆம் தேதி மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரையிலான முழு சந்திரகிரகண வேளையில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தந்தருளும் என்கிறது சாஸ்திரம். மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?

தியானம் செய்யலாம்

கிரகணத்தின் போது, ஜபம் செய்து கொண்டிருக்கலாம். தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.தானம் செய்யலாம் கிரகண நேரத்தில் கோவில்கள் நடை சார்த்தப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் கோவில்கள் திறக்கப்பட்டு, இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் செய்யப்படும். கிரகணம் முடிந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அருகில் கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்யலாம். அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.

பரிகாரங்கள்:

கிரகண நேரத்தில் சந்திர காயத்ரி, அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து விட்டு, கிரகணம் விட்டவுடன் கீழே காணும் பரிகாரங்களைச் செய்யலாம்.வெள்ளிப் பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி, அதில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வது சிறப்பு. அம்பாளுக்கு சந்தன காப்பு சாத்தி வழிபாடு செய்வதும் நல்லது. அபிராமி அந்தாதி , மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது கூடுதல் சிறப்பு. புண்ணிய நதிகளில் நீராடுவது, நோயின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்; மன உறுதியையும் தரும்.ஜாதக ரீதியாக சந்திரன் பலவீனமானவர்கள், சந்திர கிரகண நேரத்தில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்து மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

சந்திர கிரகணம் ஏற்படுவதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது. ஜாதகக் கட்டத்தில் ராசியைக் குறிப்பது சந்திரனே. ராசியை வைத்துத்தான் பலன் சொல்லுவார்கள். சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள், நிச்சயம் வெளியே வரக்கூடாது. கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் தானம், ஜபம் செய்வது நல்லது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், நீர், தயிர், ஊறுகாய் போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை போட்டு வைப்பது நல்லது. கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இந்தக் கிரகணம் கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் முடிவடையும். பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும்போது, சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் சந்திரன் இருப்பார்.

எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளி மறைக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும். கிரகணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்த பின் உணவருந்துவது நல்லது. மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்கலாம். பிறந்த ஜாதகப்படி சந்திர தசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

யாரும் இதை செய்ய கூடாது – முழு சந்திர கிரகணம் கர்ப்பிணி பெண்களும்

150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அதிசய சந்திர கிரகணம்…!

Total Page Visits: 214 - Today Page Visits: 8