எந்தெந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் முடித்தால் பிரச்சனை அதிகமாக வரும்?

ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்த விஷயங்களை தெரிந்துக் கொள்வோம்.

சிம்மம்- கன்னி

இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகமாகும்.

மீனம்- சிம்மம்

இந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்துக் கொண்டால் தொடக்கத்தில் அவர்கள் காதலில் திளைத்திருப்பார்கள். ஆனால், சில நாட்களில் பிரிவு ஏற்பட்டுவிடும்.

மேஷம்- விருச்சிகம்

மேஷம் ராசி ஏமாற்றும் குணம் கொண்ட ராசி. விருச்சிகம் பொறாமைப்படும் ராசி. இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால் இருவருக்கு இடையே விரிசல் ஏற்படும்.

ரிஷபம்- கும்பம்

ரிஷபம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளும் பொருந்தாத ராசிகள். ரிஷப ராசி பொதுவாக காதல், அன்பு, அழகு, பொறுமை ஆகிய பண்புகளையும், கும்ப ராசி எதிர்பாராத விடயங்களை செய்யும் பண்பை கொண்டிருப்பதால், இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்துப்போகாது.

சிம்மம்- ரிஷபம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும், உடல் மற்றும் மனதளவில் ஒரே மாதிரியான நிலையை எதிர்பார்ப்பதால், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி மனப்பான்மை, நாளடைவில் பிரிவிற்கு காரணமாக அமையும்.

 

மிதுனம்- கடகம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்பு செலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது.

தனுசு- மகரம்

இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

கன்னி- மிதுனம்

கன்னி மற்றும் மிதுன ராசியில் திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும். மிதுனம் அன்பே போதும் என்று நினைக்கும். ஆனால் கன்னி ராசி சேமிப்பு அவசியம் என்பதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

மிதுனம்- விருச்சிகம்

இந்த ராசிக்காரர்கள் இருவருமே எந்த ஒரு விடயத்தையும் மனதிற்குள்ளயே வைத்துக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக் கொள்ளாததால் பிரச்சனைகள் ஏற்படும்.

கும்பம்- கடகம்

இவர்கள் இருவருக்கும் மத்தியில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கும். அதுவே இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும். ஆனால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தால் வாழ்க்கையை சிறப்பாக மாற்றலாம்.

துலாம்- மீனம்

இந்த ராசிக்காரர் இருவர்களுக்கும் இடையே உண்டாகும் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

மேஷம்- கடகம்

இந்த ராசிக்காரர்கள் இருவருக்கும் எண்ணங்கள் ஒத்துப்போனாலும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறையுடன் நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால் இவர்களின் வாழ்வில் விரிசல் உண்டாகும்.

எப்பொழுதுமே இந்த ராசிக்காரங்க சக்தி வாய்ந்தவர்களாம்! உங்களின் ராசி இருக்குதா?

[sm-youtube-subscribe]

சில இராசிகள் இயல்பாகவே சக்தி வாய்ந்து காணப்படும். அந்த இராசிகள் மத்தியில் சில பொதுவான குணங்கள், பண்புகள் அவர்களை வலிமையாக வைத்திருக்கும் என கூறப்படுகிறது.

அப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த ஐந்து ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா? அப்படி இருந்தால், இந்த ரகசிய குணங்கள், பண்புகள் உங்களிடம் இருக்கிறதா? அல்லது உங்களின் சக்தியாக, வலிமையாக திகழ்கிறதா? என அறிந்துக் கொள்ளுங்கள்….

மேஷம்:

இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். இதனால், கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உண்டு.எனர்ஜி லெவல் தான் இவர்களது மைன்ஸ் பாயின்ட். மேலும். இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை இவர்கள் நிவர்த்தி செய்துக் கொண்டால் இவர்கள் தான் டாப்பில் வரலாம்.

 

கடகம்:

வலிமை வாய்ந்த இராசி. அன்பும், அக்கறையும் இவர்களது கூடுதல் பலம். சின்ன, சின்ன விஷயங்களை தங்கள் பாதையில் தாக்கம் ஏற்படுத்த இவர்கள் விடமாட்டார்கள்.இவர்களது உறுதியான குணம் எதையும் வென்றுகாட்ட காரணியாக இருக்கும். இதில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சாதிக்க முடியும் என்றும் அறிந்து வைத்திருப்பார்கள்.

 

சிம்மம்:

ஆதிக்கம் நிறைந்த இராசி. தங்கள் ராசி பிறப்பிலேயே ஆதிக்கம் கொண்டதாக கருதுவார்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள்.யாராக இருந்தாலும் தங்கள் பேசும் திறனால் அவர்களது பார்வையை மாற்றிவிடுவார்கள். இவர்களது ஒரே குறை என்னவென்றால் கோபம், அதிலும் ஆக்ரோஷமான கோபம் ஆகும்!

 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே தீவிரமாக செயற்படுபவர்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை ஓயாமால் பின்தொடர்வார்கள். கடுமையாக உழைக்க கூறுவார்கள். மேலும், இவர்களை சுற்றி இருக்கும் மக்கள், இவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள்.அன்புடன், அன்பின் வழியில் நடப்பார்கள். எதையும் கலந்தாய்வு செய்து, ஆராய்ந்து கணக்கிடுவதில் இவர்கள் கில்லி.

 

கும்பம்:

அறிவாற்றல் காரணத்தால் வலிமையான ராசியாக திகழ்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். வயதுக்கு அதிகமான ஸ்மார்ட்னஸ் இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயற்படுவார்கள். அசௌகரியமான சூழலில் இருந்து தங்களை தாங்களே வெளிக் கொண்டுவருவதில் சிறந்து திகழ்வார்கள்.

Total Page Visits: 156 - Today Page Visits: 3