பஸ்ஸில் சங்கிலியை திருடிய நடிகர் (Video)

பேருந்தில் ஏறுவதற்கு வரிசையில் காத்திருந்த பெண்ணின் கவரிங் செயினைப் பறித்துக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்று ஓப்பனிங் கொடுக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் உண்மை வேறு கதை சொல்கிறது.

பஸ்ஸில் சங்கிலியை திருடிய நடிகர் (Video)

மேலே நடைபெற்ற சம்பவம் உண்மைதான். ஆனால், உண்மையைப் போலவே இருக்க வேண்டுமென ரியாலிட்டி தவறாமல் காட்சிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தின் ஒரு காட்சி அது. மலையாள இயக்குனர் சுரேஷ் அச்சூ இயக்கும் ஆவணப்படத்திற்குப் படமாக்கப்பட்ட காட்சியில், மலையாளத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திவஞ்சிமூலா கிராண்ட் பிரிக்ஸ் படத்தில் நடித்த ராஜிவ் ராஜனும், நடிகை மீரா வாசுதேவும் நடித்த காட்சி.

பஸ்ஸில் சங்கிலியை திருடிய நடிகர் (Video)

சினிமாவுக்காக எடுக்கிறார்கள் என்பது தெரியாமல், ஒருவர் வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்து ‘குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை ஷேர் செய்யுங்கள் என்று அறிவித்துவிட்டார். இதனால் அந்த வீடியோ பதினெட்டு லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டு, நாற்பதாயிரம் நபர்களால் பகிரப்பட்டது.

இப்படிக் கிடைத்த பப்ளிசிட்டியினால் மகிழ்ச்சியடைந்த ராஜன் ‘என்னுடைய திவஞ்சிமூலா கிராண்ட் பிரிக்ஸ் படத்துக்கும் இதுபோல புரமோஷன் செய்துதர முடியுமா. இத்தனை வருடங்கள் நான் அடையமுடியாத பப்ளிசிட்டியை ஒரே நாளில் பெற்றுக்கொடுத்துவிட்டீர்களே’ என்று அகமகிழ்ந்திருக்கிறார்.