நிறம் மாறும் புதுமையான ஸ்மார்ட் வோட்ச்

நியூயார்க் நகரைச் சேர்ந்த kate spade என்ற நிறுவனம் புதுமையான ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதுமையான மாடல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அதன்படி அமெரிக்காவில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் kate spade நிறுவனம் புதிய தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

நிறம் மாறும் புதுமையான ஸ்மார்ட் வோட்ச்

ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக மட்டும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் உடல் நிலை குறித்த தகவல்களைக் கண்டறிய பல சென்சார்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற ஸ்மார்ட்வாட்ச்களை போல் இதிலும் பயனர்கள் நோட்டிபிகேஷன் பெற்றுக்கொள்ளவும், அழைப்புகளை ஏற்கவும் முடியும். அதுமட்டுமின்றி இதில் கூடுதல் சிறப்பம்சமாக பயனர்கள் அணியும் உடையின் நிறத்திற்கு ஏற்றார் போல் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் திரையின் நிறத்தை மாற்றம் செய்து கொள்ளும் வசதியை kate spade நிறுவனம் அறிமுகம் செய்துள்ளனர்.

நிறம் மாறும் புதுமையான ஸ்மார்ட் வோட்ச்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனி வடிவில் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாடலில் வெளியீடு விரைவில் இருக்கும் என kate spade நிறுவனம் தெரிவித்துள்ளது.