கண்ணே கலைமானில் கலக்கப் போகும் நயன்தாரா

உதயநிதி, சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் இயக்குநர் சீனு ராமசாமி. ஆனால், இந்தப் படத்தில் தற்போது உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீனு ராமசாமியின் ‘தர்மதுரை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். எனவே, இந்தப் படத்திலும் இரண்டு நாயகிகளைப் பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. ஆகவே, இதில் நயன்தாராவும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை தமன்னாவுக்குப் பதிலாக நயன்தாரா நடிப்பாரோ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை வாடிப்பட்டியில் இன்று (ஜனவரி 27) நடைபெற இருப்பதாகவும், வேளாண்மை மாணவனாக நடிக்கும் உதயநிதி தனது சொந்த ஊரில் விவசாயம் சார்ந்த சேவைகளைச் செய்பவராக இதில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உதயநிதி, நயன்தாரா ஜோடி ஏற்கனவே இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 127 - Today Page Visits: 1