தலைவா என ரஜினியைப் புகழ்ந்து மலேசியப் பிரதமர் ருவீட்

நட்சத்திரக் கலை விழாவிற்காக மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அந்நாட்டுப் பிரதமரை இன்று (ஜனவரி 6) சந்தித்தார்.

நடிகர் சங்கப் கட்டடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நாளை (ஜனவரி 7) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திரக் கலை விழா தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர்கள் ரஜினி, கமல் உட்படப் பலர் மலேசியா சென்றுள்ளனர்.

தலைவா என ரஜினியைப் புகழ்ந்து மலேசியப் பிரதமர் ருவீட்

அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் நடிகர் கமலை ரஜினி முதன்முதலில் சந்திப்பதால், அரசியல் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்நிலையில், அதனைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்- நடிகர் ரஜினி சந்திப்பு இன்று நிகழ்ந்துள்ளது. பிரதமரின் மாளிகைக்கு சென்ற ரஜினி, ரசாக்குடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைவா என ரஜினியைப் புகழ்ந்து மலேசியப் பிரதமர் ருவீட்

இது தொடர்பாக நஜீப் ரசாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவா, சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என பதிவிட்டுள்ளார். அரசியல் கட்சி அறிவிக்கப்போவதாக ரஜினி அறிவித்துள்ள நிலையில், ஒரு நாட்டின் பிரதமரே அவரைத் தலைவர் என குறிப்பிட்டுள்ளது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவா என ரஜினியைப் புகழ்ந்து மலேசியப் பிரதமர் ருவீட்

கபாலி படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்த படக்குழுவிற்கு அந்நாட்டு அரசு வேண்டிய உதவிகளைச் செய்தது. இதற்காக நஜீப் ரசாக்கிற்கு ரஜினி தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார். படப்பிடிப்பின்போது அவரைப் பார்க்கமுடியவில்லை என்று வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த நஜிப் ரசாக், ரஜினியை அவரது இல்லத்துக்கே பேய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.