ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த படத்தின் நிலை?

ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த படத்திற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

நடிகர் நாகார்ஜுன், நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேஸ்வராயா’. இப்படத்தில் பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அனுஷ்காவின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அனுஷ்காவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த படத்தின் நிலை?

இந்தப் படத்தை கே.ராகவேந்திர ராவ் இயக்கியிருக்கிறார். மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்துப் புகழ்பெற்ற சவுரவ் ஜெயின், வெங்கடேச பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கீரவாணி இசையமைத்துள்ள இதற்கு ஜே.கே. பாரவி கதை எழுதியுள்ளார். டி.எஸ்.பாலகன் வசனம், பாடல்களை எழுதியுள்ளார். எஸ்.துரைமுருகன், பி.நாகராஜன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த படத்தின் நிலை?

தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ நாளை (பிப்ரவரி 23) வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் வெளிவரக் கூடாது என ராமநாதபுரம் மதியழகன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், “ஆண்டாள் பெருமைகளை உலகிற்கு உணர்த்தியவர் வைரமுத்து என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. படத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாத வைரமுத்துவால் தவறான கண்ணோட்டம் ஏற்படும்; எனவே படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தார்.

ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த படத்தின் நிலை?

நாளை படம் வெளிவரவிருப்பதால் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், படத்தை வெளியிடத் தடையில்லை எனத் தெரிவித்து மதியழகன் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.