நல்லா தூக்கம் வரணும்னா இந்த 12 உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க!!

நீங்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அந்த உணவுகளில் அடங்கியுள்ள பொருட்களான ட்ரைப்டோபோஃன், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்றவைகள் உங்களுக்கு நல்ல தூக்கத்தை தர உதவுகிறது. டார்ட் செர்ரீஸ், பூசணிக்காய் விதைகள், வாழைப்பழம், மாட்டுப் பால், வால்நட்ஸ் போன்றவை நல்ல இரவு தூக்கத்தை தருகிறது. சால்மன், பாதாம் பருப்பு, கிவி பழங்கள் அவைகளும் இந்த வேலையை செய்கிறது. இன்னும் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா அப்பொழுது மல்லிகைப்பூ சாதம், கடற்பாசிகள் போன்ற உணவுகள் உங்களுக்கு ஒரு புதுவிதமான தூக்கத்தை கொடுக்கிறது.

அடிக்கடி இரவு தூக்கத்தை விடுவது டயாபெட்டீஸ், இதய நோய்கள், உடல் பருமன் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்து விடுகிறது. இது உங்கள் மன நிலை, ஆற்றல் மற்றும் செயல் போன்ற எல்லாவற்றையும் பாதித்து விடும்.ஒரு சராசரி மனிதன் குறைந்தது ஒரு நாளைக்கு 7-8 மணி நேரமாவது இரவு தூங்க வேண்டும். உங்களுக்கு நிம்மதியான அளவான தூக்கம் வேண்டுமென்றால் சரியான நேரம் படுக்க வேண்டும், காஃபைன் தவிர்க்க வேண்டும்.

Girl Sleeping on white bed

ஆல்கஹால் மற்றும் நிக்கோட்டின் தவிர்த்தல், அதிகமாக உணவருந்த கூடாது போன்ற விஷயங்களை தூங்குவதற்கு முன்பு கடைபிடித்தால் கண்டிப்பாக நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.அதே நேரத்தில் சில உணவுகளை நீங்கள் எடுத்து கொண்டால் இரவு தூக்கம் நிம்மதியான நிலையில் இருக்கும். அதைப் பற்றிய ஒரு தொகுப்பை இக்கட்டுரையில் காண உள்ளோம்.

டார்ட் செர்ரீஸ்

டார்ட் செர்ரீஸ் உங்களுக்கு ஒரு ஆடம்பரமான சுவையை தரக் கூடியது. இதில் நமது உடலில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே செர்ரீஸ் ஜூஸ் வழக்கமாக சாப்பிடுபவர்கள் நல்ல இரவு தூக்கத்தை பெறுவது தெரிய வந்துள்ளது. அவர்களின் தூங்கும் நேரம், தூங்கும் தன்மை போன்றவை நன்றாகவே இருக்கின்றனர்.

எப்படி இந்த செர்ரீஸ் தூக்கத்தை கொடுக்கிறது என்றால் அதற்கு இதிலுள்ள மெலடோனின் ஆகும். மெலடோனின் என்ற ஹார்மோன் மனித உடலில் இருக்கிறது. இது இந்த செர்ரீ பழங்களில் இருக்கிறது. இந்த ஹார்மோன் உங்கள் உடலில் சுரந்து இரவு தூக்கத்தை நன்றாக்குகிறது.மெலடோனின் ஹார்மோன் அதிகமாக இருந்தால் நல்ல இரவு தூக்கத்தையும் அதே நேரத்தில் குறைவாக இருந்தால் விழிப்புணர்வையும் பெறுவீர்கள்.எனவே யாரெல்லாம் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களோ அவர்கள் செர்ரீஸ் ஜூஸ் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு தடவை பருகி வந்தால் உங்கள் படுக்கை இரவு நிம்மதியாக இருக்கும்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் படரும் வகையை சார்ந்தது. இதில் முக்கியமான அமினோ அமிலமான ட்ரைப்டோபோஃன் இருக்கிறது. இது உங்கள் தூக்கத்தை தூண்டுகிறது.ட்ரைப்டோபோஃன் சொரோடோனின் உடன் வினைபுரிந்து நமது உடலில் உள்ள மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனாக மாறுகிறது. 3 வாரங்களுக்கு முன்னாடி செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி தகவல் என்ன சொல்கிறது என்றால் இன்ஸோமினியாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பூசணிக்காய் விதைகளுடன் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இரவில் அடிக்கடி முழிப்பது தடுக்கப்படுகிறது.

ஏனெனில் இதுள்ள ட்ரைப்டோபோஃன் நல்ல தூக்கம் தர உதவுகிறது. எனவே இரவு தூங்குவதற்கு முன்பு பூசணிக்காய் விதைகள் மற்றும் பேக்கிடு உருளைக் கிழங்கு சாப்பிட்டு தூங்கினாலே போதும் காலையில் தான் எழுந்திருப்பீர்கள்.

மாட்டுப் பால்

உங்கள் பாட்டி வைத்தியம் உங்களுக்கு கண்டிப்பாக பலன் தரப் போகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மாட்டுப் பால் குடிக்கும் போது இரவில் நல்ல தூக்கம் வரும். ஏனெனில் மாட்டுப் பாலில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் அடங்கியுள்ளன.அதுவும் இரவு நேரத்தில் கறந்த பாலை குடித்தால் இன்னும் பலன் சூப்பராக இருக்குமாம். பகல் நேர கறந்த பாலை விட இரவு நேர கறந்த பாலில் நிறைய மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் உள்ளதாம். எனவே கொஞ்சம் நேரம் காத்திருந்து இரவு கறந்த பாலை பருகுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழமும் உங்களுக்கு இரவில் நல்ல தூக்கத்தை தரக் கூடியது. வயதானவர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிப்பார்கள். வெவ்வேறு வகையான வாழைப்பழங்களை எடுத்து கொள்ளலாம்.இதில் நிறைய ட்ரைப்டோபோஃன் மற்றும் கார்ப்ஸ் போன்றவை உள்ளன. எனவே உங்களுக்கு இது ஒரு நல்ல இரவு தூக்கத்தை தருகிறது. எனவே இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு தூங்குங்கள். அப்படியே அசந்து தூங்கலாம்.

வால்நட்ஸ்

SONY DSC

உங்களுக்கு வால்நட்ஸ் ரெம்ப பிடிக்குமா. அப்போ உங்களுக்கு தூக்கமும் நன்றாக வரும். இதில் மெலடோனின் மற்றும் செரோடோனின் என்ற இரண்டு பொருட்கள் உள்ளது. இந்த இரண்டுமே உங்களுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்கக் கூடியது.

ஜாஸ்மீன் ரைஸ்

நீங்கள் வெறும் ரைஸ் இல்லாமல் ஜாஸ்மீன் ரைஸ் சாப்பிட்டிங்கனா நிம்மதியான தூக்கம் வரும். அதே நேரத்தில் அதை எடுத்து கொள்ளும் நேரம் மிகவும் முக்கியம். தூங்குவதற்கு முன்பு இந்த உணவை 4 மணி நேரத்திற்கு முன்னாடி எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சரி இது எப்படி தூக்கத்தை வரவழைக்கிறது என்று பார்த்தால் இது ஒரு அதிக கிளைசெமிக் இன்டஸ் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுப் பொருள். எனவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து வேகமாக தூக்கத்தை தருகிறது. இந்த கார்போஹைட்ரேட் ட்ரைப்டோபோஃன் உருவாக உதவுகிறது.

எனவே இந்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தூக்கத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். அதிகமான சர்க்கரை டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு நல்லது இல்லை. எனவே நீங்கள் இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம்.

சால்மன்

ஒரு துண்டு மீன் சாப்பிட்டு பாருங்கள் நல்ல தூக்கம் வரும். சால்மன் மீனில் விட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த இரண்டு பொருட்களும் நமக்கு நிம்மதியான தூக்கத்தை தருகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் குழந்தைகளில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியானது டோகோஸோஹெக்ஸானிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் 58 நிமிடங்கள் கூடுதல் இரவு தூக்கத்தை தருகிறது.

கிவி பழங்கள்

கிவி பழங்களில் செரோடோனின் உள்ளது. இதுவும் நமக்கு சரியான இரவு தூக்கத்தை தருகிறது. தினமும் இரண்டு கிவி பழங்களை தூங்குவதற்கு முன்பு ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் தூக்கம் தானாக வருமாம். அதே நேரத்தில் இரவில் நடுவில் நடுவில் எழுந்திருப்பது கூட நின்றிடுமாம். இந்த சுவையான பழத்தை சுவைத்து நிம்மதியான தூக்கத்தை பெற மறந்து விடாதீர்கள்.

கீரைகள்

கீரைகள் நமது உடலுக்கு நிறைய வகையில் நன்மை அளிக்கிறது என்பது தெரியும். ஆனால் இதுவரை இந்த ஒரு அற்புத பலனை அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த கீரையை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது நல்ல தூக்கத்தை பெற முடியும். இதற்கு காரணம் இதிலுள்ள லாக்டோகேரியம் என்ற பொருள் தான். இது நல்ல தூக்கம் தருவதோடு நமது உடலில் ஏற்படும் வலியையும் போக்குகிறது.

கடற்பாசிகள்

உங்களுக்கு இரவில் தூக்கத்தை தர பழுப்பு நிற கடற்பாசிகளும் துணைபுரிகின்றனர். ஆராய்ச்சி படி பார்த்தால் இதிலுள்ள டெனின் அதாவது பைலோரடானின் என்ற பொருள் நமது நரம்புகளின் கடத்தியான நியூரோடிரான்ஸ்மிட்டரை சரி செய்து நமது மூளையை ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது.இந்த தகவல் உண்மை என்று ஜாப்பனீஸ் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த கடற்பாசிகளை இரவில் எடுத்து கொண்டு நிம்மதியான தூக்கத்தை பெறுங்கள்.

பாதாம் பருப்பு

பாதாம்பில் ட்ரைப்டோபோஃன் மற்றும் கார்போஹைட்ரேட் என்ற இரண்டுமே உள்ளது. இதில் மக்னீசியம் தாதுக்கள் இருப்பதால் உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்து உங்களை அசந்து தூங்க செய்கிறது. எனவே கைநிறைய பாதாம் பருப்பை எடுத்து கொண்டு உங்கள் இரவு தூக்கத்தை அழகாக்குங்கள்.

சீமை சாமந்தி தேநீர்

கெமோமில் டீ தூக்கத்திற்கென்றே தயாரிக்கப்படும் டீ ஆகும். இதிலுள்ள ப்ளோனாய்டான பீஜெனின் உங்கள் மூளையில் உள்ள பென்ஸோடியாஷெப்பைன் என்ற நரம்பியல் இறப்பியை தூண்டுகிறது.2-3 டேபிள் ஸ்பூன் உலர்ந்த கெமோமில் எடுத்து ஒரு கப் கொதிக்கின்ற தண்ணீரில் கலந்து 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கெமோமில் டீ ரெடி. இதை இரவில் பருகி விட்டால் நிம்மதியான அமைதியான தூக்கம் பெறுவீர்கள்.

நல்லா தூக்கம் வரனும்னா இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க !

Total Page Visits: 2673 - Today Page Visits: 15