போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி (Video)

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்ற அவானி சதுர்வேதி போர் விமானத்தைத் தனியாக ஓட்டிச் சென்றார்.

போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி (Video)

இந்திய ராணுவத்தில் முதல் முறையாக விமானப் படை விமானிகளாகப் பெண்களையும் சேர்க்கலாம் எனப் பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. அதற்கான சோதனை முயற்சியில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்களும் விமானப்படையில் பல்வேறு சவால் மிக்க பயிற்சிகளை மேற்கொண்டு போர் விமானிகளாகத் தேர்வாகினர். பயிற்சி முடித்த அவர்கள் அப்போதைய ராணுவ மந்திரியான மனோகர் பாரிக்கர் முன்னிலையில் பெண் விமானிகளாக முறைப்படி பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் எம்.ஐ.ஜி-21 ரக போர் விமானத்தைத் தனியாக ஓட்டிச் சென்றார். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னாவைச் சேர்ந்தவர். எம்.ஐ.ஜி ரக போர் விமானத்தைத் தனியாக இயக்கியதன் மூலம் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார் அவானி சதுர்வேதி.

போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி (Video)

அவானி சதுர்வேதியின் தந்தை தினகர் சதுர்வேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீர்வளத் துறைப் பொறியாளர். ராணுவத்தில் இருக்கும் தனது சகோதரரைப் பார்த்து அவரைப் போல் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ஊக்கம் பெற்ற அவானி, விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முறையாகப் பயிற்சி பெற்று தற்போது போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி (Video)

இதன் மூலம் பெண்களைக் கொண்டு போர் விமானங்கள் இயக்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணையச் செய்துள்ளார்.