களவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா?

விமல், ஓவியா நடித்த களவாணி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் களவாணி திரைப்படத்தை இயக்கிய சற்குணம் ஓவியாவின் மூலம் தொடங்கிவைக்கப்பட்ட அவரது வர்மன் தயரிப்பு நிறுவனம் மூலம் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாவதாக சிவகார்த்திகேயன் மூலம் அறிவித்தார். ஓவியாவின் ஆல்-டைம் ஃபேவரிட் படமான அதன் தொடர்ச்சியில் அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் தயாராகினார்கள். ஆனால், அதில் ஒரு புதுக்குழப்பம் உருவாகியிருக்கிறது.

களவாணி திரைப்படத்தை சற்குணம் இயக்கியிருந்தாலும், அந்தப் படத்தை தயாரித்தவர் ஷெராலி பிலிம்ஸை சேர்ந்த நசீர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வதம் என்ற திரைப்படத்தை பூணம் கவுர் நடிப்பில் உருவாக்கியிருக்கிறோம். அந்தப் படத்தின் ரிலீஸுக்குப்பிறகு களவாணி 2 என்ற பெயரில் படம் எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம். களவாணி 2 டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பதிவுசெய்து சரியான முறையில் புதுப்பித்து வைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

முதல் பாகத்தில் இருந்த இயக்குநர், நடிகர், நடிகை ஆகிய மூவர் ஒரு அணியிலும், தயாரிப்பாளர் ஒரு அணியாகவும் ‘களவாணி 2’ படத்தின் போட்டியில் நிற்கிறார்கள். இதில் யாருக்கு சாதகமாக இந்த டைட்டில் போகப்போகிறது என்பதைவிடவும், ஓவியாவை யார் படத்தில் நடிக்கவைக்கிறார்கள் என்பதை அறியவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Total Page Visits: 96 - Today Page Visits: 1