விருந்துக்கு செல்ல மறுத்த நடிகை சுட்டுக் கொலை (Video)

பாகிஸ்தானில் பெஷாவர் அருகேயுள்ள மார்தான் நகரை சேர்ந்த நடன நடிகை சும்பால் கான்.

நேற்று இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அவரை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு தங்களுடன் வந்து நடனமாட வேண்டும் என அழைத்தனர்.

அதற்கு அவர் மறுத்து விட்டார். அவர்கள் 3 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டிக் கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நடிகை சும்பால் கானை சரமாரியாக சுட்டனர்.

இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. அவர்களில் ஒருவர் பெயர் நயீம் கத்தக் . இவர் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார்.

மற்றொருவர் ஜெகாங்கீர் கான். இவர் கொல்லப்பட்ட நடிகை சும்பால்கானின் முன்னாள் கணவர். மற்றொருவர் டாக்சி டிரைவர் என கண்டுபிடிக்கப்பட்டது. சமீப காலமாக மார்தான் நகரில் கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடிகை சுட்டுக் கொல்லப் ட்டுள்ளார். இந்த 3 வழக்குகளிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

Total Page Visits: 134 - Today Page Visits: 1