நீச்சல் உடை சர்ச்சையில் சமந்தா

நீச்சல் உடை அணிந்த தன்னுடைய புகைப்படத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்களுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு எனப் பல மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருபவர் சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டார். தமிழில் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி கண்டது.

விஜய் சேதுபதி நடித்துவரும் சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் ராம் சரணுக்கு ஜோடியாக ரங்கஸ்தலம் ஆகியவற்றிலும், பொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்துவரும் சமந்தா, மாலத்தீவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து ஓய்வெடுத்துவருகிறார். அங்கு நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து, நாகார்ஜுனா மருமகள் இவ்வாறு நீச்சல் உடை அணிவதா, பாலிவுட் நடிகைகள்கூட திருமணத்துக்குப் பிறகு நீச்சல் உடை அணிய மாட்டார்கள் என அவர் எப்படி உடை அணிய வேண்டும் எனப் பலரும் ஆலோசனை வழங்கினார்கள்.

இதைக் கண்டு கோபமடைந்த சமந்தா இன்ஸ்டாகிராமில் “என்னுடைய விதிமுறைகளை நான் வகுத்துக்கொள்கிறேன். உங்களுடைய விதிகளை நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்” எனவும், “மற்றவர்களால் எதை உறுதியாகச் செய்ய முடியாதோ, அதை உறுதியுடன் செய்பவளே வலுவான பெண்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Total Page Visits: 163 - Today Page Visits: 2