‘வயதானாலும் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்

‘வயதானாலும் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்’ என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரேயா

‘வயதானாலும் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்

ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடசத்திரங்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா, தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக படவாய்ப்புகள் குறைந்தாலும் பாடலுகளுக்கு நடனமாடி வருவதோடு தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வருகிறார்.

‘வயதானாலும் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரேயா, “நான் சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனை ஆண்டுகள்தான் நடித்துக்கொண்டே இருப்பீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். ஹாலிவுட் நடிகை மெரில் 60 வயதை தாண்டிய பிறகும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரைப்போல் நானும் சினிமாவில் நீடித்து இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

‘வயதானாலும் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்

15 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் ஸ்ரேயா தற்போது நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசியுள்ளார். “தமிழில் நரகாசுரன், தெலுங்கில் காயத்ரி, வீர போக வசந்த ராயலு, இந்தியில் தட்கா என்று மூன்று மொழி படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

‘வயதானாலும் கூட நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்

நான் கதக் நடன கலைஞர். சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டு இருந்ததால் 10 ஆண்டுகளாக நடன பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. தற்போது மீண்டும் நடன பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.