உங்கள் இன்றைய ராசி பலன்-14/02/2018

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். தாயின் நோய் சிறிது கவலை தரலாம். நோயில் இருந்து வேறு எதிலாவது அவருடைய கவனத்தை திசைதிருப்பி, வலியை குறைக்கச் செய்யலாம். உங்களின் அறிவுரைகள் மருந்து போல அமையும். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். கிரியேட்டிவிட்டி போய்விட்டதாக உணர்வீர்கள். முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

 

மிதுனம் ராசிபலன்:

மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாகவும் டென்சன் இல்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மன உறுதியை மேம்படுத்தும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். குடும்பத்தில் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் சிறிது கவலைகள் ஏற்படுத்தலாம். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் வெற்றி இடையூறு செய்ய நினைப்பவர்கள் இன்று உங்கள் கண் எதிரே மோசமான வீழ்ச்சியை சந்திப்பார்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஒருவரை பற்றி மற்றவர் உல்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. ‘பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டாம்- ஏனெனில் மற்றவரை அது எளிதில் காயப்படுத்தும். கனவுத் தொல்லைகளை மறந்து ரொமாண்டிக் பார்ட்னருடன் இருப்பதில் ஆனந்தம் காணுங்கள். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் பழைய நண்பர் ஒருவர் வருகை தந்து இனிமையை ஏற்படுத்துவார். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எந்த புதிய திட்டத்தையும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார்.

 

கன்னி ராசிபலன்:

இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.

 

துலாம் ராசிபலன்:

எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். உங்கள் துணைக்கு உங்கள் மேல் சந்தேகம் வரக்கூடும். இதனால் நீங்கள் வருத்தமடையலாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் – உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். பார்ட்னர்கள் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும். இது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

தனுசு ராசிபலன்:

அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். நீங்கள் நினைத்த்து போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் உங்கள் உங்கள் மன உறுதியால் இன்று ஆபீசில் உங்களது நாள் நல்ல முறையில் கழியும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

 

கும்பம் ராசிபலன்:

உடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். எதையும் முடிவு செய்வதற்கு முன்பு குடும்பத்தினரின் கருத்தையும் கேளுங்கள். நீங்களே ஒருதலைபட்சமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சிறந்த ரிசல்ட்கள் பெற குடும்பத்தில் இணக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் யாருடன் பேச வேண்டுமென முயற்சி செய்தீர்களோ அவரிடம் பேசும் நல்ல வாய்ப்பு இன்று கிடைக்கும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம்.

 

மீனம் ராசிபலன்:

பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள். உங்கள் அன்புக்குரியவருக்கானது பிசினஸ் பார்ட்னர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க நீங்கள் ஒன்றாக உழைத்திடுங்கள். உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Total Page Visits: 75 - Today Page Visits: 1