உங்கள் இன்றைய ராசி பலன்-17/02/2018

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள்.

தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது.

பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும்.

உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள் –

அதில் இருந்து மதிப்பு மிக்க யோசனை கிடைக்கலாம். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும்.

அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். ஊகங்கள் பேரழிவாக அமையும் – எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். உங்கள் சூழ்நிலையையும் தேவைகளையும் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். ஒரு அன்பான தகவல் மூலம் இன்றைய நாள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். கஷ்டமான பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபட, உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

 

மிதுனம் ராசிபலன்:

அளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்.

 

கடகம் ராசிபலன்:

அடிக்கடி உடைந்து போவது சில பிரச்சினைகள் தரும். நரம்பு மண்டலம் சரியாகிட முழு ஓய்வெடுங்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார்.

 

சிம்மம் ராசிபலன்:

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உடல் வலியால் அவதிப்படும் வாய்ப்பு அதிகம். உடலில் அதிக அழுத்தத்தை தரும் வகையில் வலுவான எந்த வேலையையும் தவிர்த்திடுங்கள். போதிய ஓய்வு எடுத்திடுவதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். பார்ட்னரின் கருத்துகளை நீங்கள் புறக்கணித்தால் அவர்கள் பொறுமை இழப்பார்கள். உங்கள் காதலர் அளவுக்கு மீறி புகழக் கூடும் – இந்த உலகில் என்னை தனியாக விட்டுவிடாதே என்று – கவனமாக இருங்கள். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.

 

துலாம் ராசிபலன்:

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும் – அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். அன்புக்குரியவர் இல்லாமல் நேரத்தைக் கடத்துவது கஷ்டமாக இருக்கும். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்படலாம். ஆனால் நீங்கள் இருவரும் அதனை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் – ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்!

 

மகரம் ராசிபலன்:

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் – உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரிக்கு திருமண ஏற்பாடு செய்தி மகிழ்ச்சி தரும். அவரைவிட்டுப் பிரிவதால் நீங்கள் சோகமாக உணரலாம். ஆனால் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல், நிகழ்காலத்தை அனுபவிக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

 

கும்பம் ராசிபலன்:

அதிக கொலஸ்டிரால் உணவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் உற்சாகத்தை ஊக்கப்படுத்தும். உங்கள் குடும்பத்தினரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்குப் புத்துணர்வு தரும். உங்கள் துணைவரின் குடும்பத்திருடைய தலையீடுகளால் உங்கலுடைய நாள் அப்செட்டாக இருக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.

 

மீனம் ராசிபலன்:

பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். மனைவியுடன் உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிக நல்ல நாள். ஒரு குடும்பத்தில் உறவில் இருவருமே முழுமையாக அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு இருவருமே தயாராக இருக்க வேண்டும். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருமையால் தடைபடலாம் அனால் நாள் இனிமையாகவே இருக்கும்.

Total Page Visits: 86 - Today Page Visits: 1