ஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர்

சமூக வலைதளங்களில் உலகின் மிகப் பிரபலமான ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலில், ‘இனி மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க் டாப் அப்ளிகேஷன் பயன்படுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர்

பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், அதன் சேவையை அனைத்துவிதமான ஓ.எஸ்களிலும் செயல்படும் வகையில் வெளியிட்டிருந்தனர். ஆனால், ஆப்பிள் கணினிகள் கொண்டுள்ள பயனர்கள் பெரும்பாலும் ட்விட்டர் செயலியைப் பயன்படுத்துவது கிடையாது என்பதாலும், அவர்கள் எதிர்பார்ப்பை இந்த ட்விட்டர் அப்ளிகேஷன் நிறைவேற்றவில்லை என்பதாலும் இனி மேக் பயனர்கள் அதைப் பயன்படுத்த முடியாது என்ற தகவலை ட்விட்டர் நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி கடந்த (பிப்ரவரி 16) வெள்ளிக்கிழமை முதல் மேக் பயனர்கள் ட்விட்டர் செயலியை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய இயலாது.

ஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர்

மேலும், மேக் கணினிகளுக்கான ட்விட்டர் சப்போர்ட் 30 நாள்களில் நிறைவுறும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் பயனர்களுக்கு ஆப்படித்த ருவிட்டர்

எனவே 30 நாள்களுக்கு பின்னர் மீண்டும் மேக் பயனர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியுமா அல்லது புதிய அப்ளிகேஷன் வெளிவருமா எனப் பயனர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.