பெண் பார்க்கச் சென்ற ஆர்யாவுக்கு எதிர்ப்பு

தமிழ் சினிமாவின் செல்லமான பேச்சுலர் என்றால் ஆர்யாதான். அவருக்குத் திருமணம் செய்துவைக்கும் நோக்கத்துடன்

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கியிருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் உதவியுடன் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டுக்கு ஆர்யா செல்வதாக ஏற்பாடாகியிருந்தது.

அப்படி ஆர்யா சென்ற நேரம், அங்குள்ள மகளிர் அமைப்பினரால் சென்னைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

ஆர்யா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்து ஷூட்டிங்குக்குப் புறப்படுவதாக இருந்தனர்.

ஆனால், படப்பிடிப்புக்கு அவர்கள் தயாராகியிருந்த நேரத்தில், ஹோட்டலின் வாசலருகே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. என்னவென்று விசாரித்த படப்பிடிப்பு நிர்வாகத்தினர்.

ஆர்யா மற்றும் இதர பணியாட்களை ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறி தடுத்துவிட்டனர்.

ஆர்யா கும்பகோணம் வந்திருக்கும் நோக்கத்தை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் ஹோட்டலின் வாசலில் ஆர்யாவை அந்த ஊரிலிருந்து வெளியேறும்படி கோஷங்கள் எழுப்பியபடி இருந்ததால்,

நேற்று முழுவதும் திட்டமிட்டபடி அவர்களால் ஷூட்டிங் நடத்த முடியவில்லை. எனவே, அனைத்துப் பொருள்களையும் பேக்கிங் செய்துகொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் இது பெரிய விஷயமே இல்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதற்கு எதிராக வலிமையான போராட்டங்களை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது நடக்கவில்லை.

Total Page Visits: 216 - Today Page Visits: 1