விண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் ! அட இங்கு இத்தனை வசதிகளா ?

Subscribe our YouTube Channel

அமெரிக்காவிலுள்ள விண்வெளி நிறுவனம் முதல்முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டலொன்றை நிர்மாணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ‘ஓரியன் ஸ்பேன்’ என்ற நிறுவனமே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளது.

விண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் ! அட இங்கு இத்தனை வசதிகளா ?இதன் பணிகளை விரைவில் ஆரமிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முழு நிர்மாணப் பணிகளும் நிறைவுபெற்ற பின்

பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந் நிறுவனத்தின் சி.இ.ஓ ஃபரான்க் பன்கெர் (Frank Bunger) கருத்துத் தெரிவிக்கையில்,

விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவுண்டு. இதனை நிஜமாக்கவே இந்த முயற்சி.

விண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் ! அட இங்கு இத்தனை வசதிகளா ?மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் எண்ணினோம்.

விண்வெளியில் அரோரா என்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் ராக்கெட் வடிவில் இருக்கும்,

பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைக்கப்படவுள்ளது.

இவ்வளவு தூரத்தில் இதுவரை ஒரு ஹோட்டல் அமைக்கப்படவில்லை.

விண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் ! அட இங்கு இத்தனை வசதிகளா ?இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின்போது ஆறு பயணிகள் உட்பட எங்கள் குழுவைச் சேர்ந்த இருவர அனுமதிக்கப்படுவார்கள்.

மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

விண்வெளியில் மிதந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை புவியிலிருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம்.

விண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் ! அட இங்கு இத்தனை வசதிகளா ?இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட உள்ளது.

12 நாட்கள் வரை பயணிகள் இங்குத் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும் என்றார்.

குறித்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியப் பணமதிப்பின் படி சுமார் 61 கோடி ரூபா செலவாகும்.

மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக் குறைவு என்கிறார்கள் மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.