அமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை !

நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா,

ஆஸ்திரேலியா புலனாய்வு நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் கொழும்புக்கு விரைந்துள்ளனர்.

அமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை !அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள்

இன்று கொழும்பு வந்து விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் இன்று நேரில் ஆராய்ந்தார்.

இதன்போதே அவர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை !“எவ்பிஐ அதிகாரிகள் இன்று வந்துள்ளனர். அவர்கள் எமக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்டர்போல் நிபுணர்கள் நாளை வரவுள்ளனர். ஆஸ்திரேலிய பொலிஸ் அதிகாரிகள் குழுவும்

விசாரணைக்கு உதவுவதற்காக கொழும்பு வரவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.