கொரோனா வைரஸ் எதிரொலி ! வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் – நரேந்திர மோதி அறிவிப்பு !

இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த ஊரடங்கு அமுலுக்கு வர இருக்கிறது.

கொரோனாவின் தீவிரம்  குறித்து இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலி ! வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி அறிவிப்பு !

மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம்.

ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம்.

ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான்.

ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பிரதமர் மோடி உரையின் சாராம்சம்

நான் மீண்டும் கொரோனா தொற்று குறித்து உங்களிடம் பேச வந்துள்ளேன்.ஒவ்வொரு இந்திய மக்களும் இணைந்து ஊரடங்கை வெற்றிகரமானதாக்கினீர்கள்.

குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும்
இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த முயற்சிகள் அனைத்தும் இருந்தும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலி ! வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி அறிவிப்பு !
இந்த கொரோனா தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் மட்டும்தான்.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க இதை தவிர வேறு வழியில்லைஇந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தனித்திருக்க வேண்டும் என தவறாக நினைக்கின்றனர்.

ஆனால் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும் தனித்திருத்தலை கடைபிடிக்க வேண்டும்.இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்க போகிறேன்.

இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும், லாக் டவுன் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும், மாவட்டமும் முடக்கப்படுகிறது.

  கொரோனா வைரஸ் எதிரொலி ! வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி அறிவிப்பு !
இது ஜனதா ஊரடங்கை காட்டிலும் வலுவனாது.உங்களிடம் கை கூப்பி வேண்டிக்கொள்கிறேன் தற்போது நீங்கள் நாட்டில் எங்கு உள்ளீர்களோ அங்கயே இருங்கள்.

இது 21 நாட்களுக்கு தொடரும்.21 நாட்களுக்கு வீட்டை விட்டு எங்கேயும் செல்லாதீர்கள்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனாவை உங்கள் வீட்டுக்கு அழைத்து வரலாம்.இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

67 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த 11 நாட்களில் அது இரண்டு லட்சம் ஆனது.

அடுத்த நான்கு நாளில் மூன்று லட்சத்தை தொட்டது.இந்த கொரோனா தொற்றை தடுப்பது மிகவும் கடினமானது.

கொரோனா வைரஸ் எதிரொலி ! வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி அறிவிப்பு !