ஈரானில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு!

சீனாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், தற்போது 30க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, ஈரான், இத்தாலி, அமெரிக்கா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் மொத்தம் 5000 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிலும் சமீப நாட்களில் ஈரானில்  வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 129 உயிரிழப்புகளும் புதிதாக 1,053 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்ததாக ஈரான் அறிவித்தது.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஈரானில் 988ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,991 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள ஸ்பெயின் நாட்டில் புதிதாக 2,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது.

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது.

Total Page Visits: 139 - Today Page Visits: 3