கொரோனா வைரசால் ஒரு தலைமுறையை இழந்து நிற்கும் இத்தாலி பேர்கமோ ( Bergamo ) நகர மக்கள் !

இத்தாலியில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோவின் (Bergamo) கிறிஸ்தவ தேவாலயங்களில் – புதைக்கப்படுவதற்காக காத்திருக்கும் பிரதேப்பெட்டிகள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன.

இறந்தவர்களின் உடல்கள் பல நாட்களாக பூட்டிய அறைகளிற்குள் வைக்கப்பட்டுள்ளன.

வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் அதனை கையாள முடியாமல் இறுதிக்கிரியைகளை நடத்துபவர்கள் திணறுகின்றனர்.

புதன்கிழமை வரை இத்தாலியில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இறுதிசடங்குகள் எதுவுமின்றி புதைக்கப்பட்டுள்ளனர்.

லொம்பார்டி பிராந்தியத்தின்  பெர்கமோவில் 1640 பேர் உயிரிழந்துள்ளனர்,3933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிராந்தியம் முழுவதிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை.ஆனால் பிராந்தியத்தில் இறுதிநிகழ்வுகளை நடத்தவதில் பிரபலமான சிஎவ்பி நிறுவனம்  மார்ச் முதலாம் திகதி முதல் 600 இறுதிசடங்குகளை கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வழமையாக இந்த எண்ணிக்கை 120 ஆக காணப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களில்ஒரு தலைமுறையே உயிரிழந்துள்ளது என தெரிவிக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் அன்டோனியோ ரிச்சார்டி நாங்கள் இதனை போல எதனையும் பார்த்ததில்லை இது எஙகளை அழச்செய்கின்றது என தெரிவித்துள்ளார்.

பெர்கமோவில் இறுதிசடங்குகளை நடத்தும் 80 நிறுவனங்கள் உள்ளன.அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அந்த நிறுவனங்கள் காணப்படுகின்றன,

பிரதேப்பெட்டிகளிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது,இறுதிசடங்குகளை கையாளும் பணியாளர்கள் வைரசினால் பாதிக்கப்படுவதும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

இறந்தவர்களை கையாள்வது குறித்து மருத்துவமனைகள் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளன.

இறந்தவர்களிற்கு உரிய ஆடைகளை அணிவிக்காமலே அவர்களின் உடல்களை பெட்டிகளிற்குள் வைக்கின்றனர்.

அவர்களின் உடல் மூலம் எற்படக்கூடிய தொற்று அபாயம் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குடும்பங்கள் தங்கள் நேசத்திற்குரியவர்களை பார்க்கவோ அல்லது உரிய இறுதி மரியாதையை வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது இது உளவியல் ரீதியில் மிகப்பெரும் பிரச்சினை ரிக்கார்டி தெரிவிக்கின்றார்.

எங்கள் பணியாளர்கள் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதால் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
வீடுகளில் இறப்பவர்கள் பல நடைமுறைகளிற்கு பின்னரே அகற்றப்படுகின்றனர்.

இரு வைத்தியர்கள் அவர்களின் மரணம் குறித்து உறுதி செய்யவேண்டியுள்ளது அவர்கள் வரும்வேளையில் எங்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருப்போம் என்கின்றார் ரிக்கார்டி.

நேற்று 88 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார், அவரிற்கு சிறிது நாட்களாக காய்ச்சல் காணப்பட்டது,அம்புலன்சை அழைத்தபோதிலும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை,

அவர் தனது அறையில் தனித்து மரணமடைந்தார் என ஸ்டெல்லா என்ற ஆசிரியை தெரிவிக்கின்றார்.

பிரேதப்பெட்டிகள் எதுவும் இல்லாததால் – பிரேதப்பெட்டிகள் கிடைக்கும் வரை அதிகாரிகள்  அவரின் உடலை அந்த அறைக்குள் வைத்து உறவினர்கள் எவரும் உள்ளே நுழைய முடியாதபடி  மூடினார்கள்  என அவர் தெரிவித்தார்.

உறவினர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையிலும்  உரிய இறுதி மரியாதையை வழங்க முடியாத நிலையிலும் காணப்படுகின்றனர்.

வழமையாக மரணித்தவர்களுடன் ஒரு நாள் தங்கியிருப்போம் நல்ல உடைகளை அணிவிப்போம் இது இப்போது இடம்பெறுவதில்லை என்கின்றார் 74 வயது அலெசாண்டிரோ.

நன்றி – வீரகேசரி இணையம் – கார்டியன் இணையம்

Total Page Visits: 263 - Today Page Visits: 2