இத்தாலியில் தொடரும் சோகம் – கொரோனாவால் நேற்று மட்டும் 627 பேர் பலி !

சீனாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், தற்போது 30க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகெங்கும் இதுவரை 10 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் கொரோனா கோரத்தாண்டம் ஆடுகிறது.

இத்தாலியில் தொடரும் சோகம் – கொரோனாவால் நேற்று மட்டும் 627 பேர் பலி !அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் (20) கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் தாண்டியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக நான்காயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிந்தவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இத்தாலியில் தொடரும் சோகம் – கொரோனாவால் நேற்று மட்டும் 627 பேர் பலி !
இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 021 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் ஐயாயிரத்து 986 புதிய நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட போதிலும், தற்போது அங்கு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் சீனாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.