இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு ! அதிர்ச்சியில் மக்கள் !

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும்  கொரோனா (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இன்று முதல் வெலிகந்த மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும்

இந்த வைத்தியசாலைகளில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்   சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Total Page Visits: 71 - Today Page Visits: 1