இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு !

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது.

எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்படும் என செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு !
கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்த ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும். பின்னர் அன்றைய தினம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு !அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடங்களுக்கு இடம் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு – 2

8 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு இன்று காலை நீக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளி வரை நீடிப்பு !

கொழும்பு,கம்பஹா,புத்தளம்,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய 8 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு இன்று காலை நீக்கப்பட்டது.

இந்த பிரதேசங்களில் மீண்டும் இன்று 2.00 மணி தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும்,கொழும்பு,புத்தளம்,கம்பஹா ஆகியபிரதேசங்களில் நாளைகாலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நண்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
#CoronaVirus #Covid19 #Curfew #Police #Goverment #Peopel #Colombo #jaffna #gampaha #mullaitivu #vavuniya #Mannar #kilinochchi

வீடியோ இணைப்பு –