என் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு !

நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன் மறைவானது திரையுலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதிகம் பிரபலமில்லாத நடிகர் என்றாலும் சென்னையில் பெயர் பெற்ற மருத்துவர் மற்றும் இளம் வயது ஆனவர் என்பதால் அவருடைய மறைவானது அனைவருக்கும் சோகத்தினை ஏற்படுத்தியது.

என் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் - Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு !

மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அவருடைய இறுதிச்சடங்கு குறிப்பிட்ட சில நண்பர்களுடன் நிறைவடைந்தது.

என் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் - Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு !அந்த இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவருடைய நீண்டகால நண்பரான மருத்துவர் அஸ்வின் விஜய் தன்னுடைய முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

“இதுதான் நாங்கள் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம். நான் இன்னும் சில புகைப்படங்கள் எடுத்து இருக்க வேண்டும். இதுவரை எனது பிறந்தநாளை நான் ஒருபோதும் ஊடகங்களில் வெளி உலகிற்கு அறிவித்தது இல்லை.

ஆனால் மார்ச் 26 தான் என்னுடைய பிறந்தநாள், அந்த நாள் எங்களை விட்டுச் சென்ற நாளாக வலி மிகுந்த நாளாக மாறிவிட்டது.

என் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் - Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு !
எனது பிறந்தநாளில் நான் பதில் அளித்த முதல் தொலைபேசி அழைப்பும் உங்களுடையது தான், நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது, மச்சான் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வருடம் வெட்டுவதற்கு என்னிடம் பிரெட் மட்டுமே இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறினாய்.

ஆனால் அதுவே கடைசி அழைப்பாக இருக்கும் என்பதை நான் உணரவில்லை. இனி வர இருக்கும் ஒவ்வொரு மார்ச் 26 எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன்” என உருகத்துடன் தெரிவித்துள்ளார்.

This was the last photo we took. I should have taken more. I have never declared my birthday on media ever but March…

Slået op af Dr Ashwin VijayFredag den 27. marts 2020

 

Dr Sethuraman’s Final Journey, Family & Friends in Tears | 1985 – 2020