சினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் ! குவியும் பாராட்டுக்கள் !

கொரானா நோய்குறித்த அச்சத்தில் ஒட்டுமொத்த உலகநாடுகளுமே நடுங்கிப்போய் இருக்கிறது. உலகம் முழுவதும் சேர்ந்து இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும்வகையில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை விட இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கரோனா வெகுவாகவே உலுக்கி வருகிறது. கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.


நம் கைகளாலேயே நம் கையாலேயே கண், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பொதுமக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவிவருகின்றனர். வேலை இழந்து பல ஆயிரக்கனக்கான குடும்பங்கல் கஷ்டத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு பலரும் நேசக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் சாய்தீனா தன் சொந்த செலவில் அவரது எல்.எப்.இ என்னும் அமைப்பின் மூலம் 250 ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.

அதில் 5 கிலோ அரிசி, ஒருகிலோ கோதுமை மாவு,சாம்பார் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்குரிய பொருள்கள் இருந்தது.

சினிமாவில் ஆக்ரோசமான வில்லனாக வர்ம் சாய் தீனாவின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்று இருக்கிறது.

Total Page Visits: 1299 - Today Page Visits: 2