அமெரிக்காவில் மீண்டும் கோர தாண்டவம் ! ஒரே நாளில் 3000 க்கு மேல் மக்கள் பலி !

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் நேற்று 1,738 பேர் பலியாகி இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 46 அயிரத்து 583 ஆக உயர்ந்தது.

இதேபோன்று 8 லட்சத்து 34 ஆயிரத்து 858 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது ஸ்பெயின் நாட்டை விட 4 மடங்கு அதிகம். ஸ்பெயினில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 389 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. இந்த நாடுகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கையை கொண்டுள்ளன.

இதேபோன்று உலக அளவில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.

இந்த எண்ணிக்கை இன்று உயர்ந்து உலக அளவில் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இதுவரை 7 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தினை நெருங்கி வருகிறது. இது மற்ற நாடுகளை விட எண்ணிக்கையில் அதிகம் ஆகும். பாதிப்பு எண்ணிக்கையும் 8 லட்சத்து 80 ஆயிரத்து 204 ஆக உயர்ந்து உள்ளது. 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

உலக சுகாதார அமைப்புக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்கிய சீனா !

கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரசால் 26 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், உலகளாவிய சுகாதாரம் தொடர்பான விவகாரங்களையும் ‘WHO’ எனப்படும் உலக சுகாதார அமைப்பு கையாண்டு வருகிறது.

சுவிஸ்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பாகும்.

இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்தனை நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அதிக நிதியுதவி செய்து வந்தது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை எனவும், வைரஸ் தொடர்பான தகவல்களை மறைத்து சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியையும் அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில் அந்த அமைப்புக்கு சீனா கூடுதல் நிதி வழங்கியுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் கொரோனா வைரசுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் உலகளாவிய முயற்சிகளுக்காக கூடுதலாக 30 மில்லியன் டாலர்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செய்தித்தொடர்பாளர் ஜெங் ஷூவாங் கூறுகையில்,” ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 20 மில்லியன் டாலர்களுடன் சேர்த்து கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது. இது வளரும் நாடுகளில் சுகாதார பணிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்’’ என்றார்.

உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா ஆண்டுக்கு சராசரியாக 400 முதல் 500 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்கி வந்தது . ஆனால் சீனாவோ ஆண்டுக்கு சராசரியாக 40 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 1566 - Today Page Visits: 3