அமெரிக்காவில் தொடரும் மரண ஓலம் ! ஒரே நாளில் 2500 பேர் பலி ! இதுவரை 42,500 மக்கள் உயிரிழப்பு !

அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த கொடிய வைரஸ் 24 லட்சத்து 80 ஆயிரத்து 165 பேருக்கு பரவியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 63 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 763 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 248 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 370 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது . தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 759 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 123 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா முற்றாக அழியும் வரை லாக் டவுன் நீடிக்கும்: பிரிட்டன் பிரதமர் முடிவு?

அடுத்த மாதம் லாக் டவுனை லண்டனில் தளர்த்துவது தொடர்பாக பல அமைச்சர்கள், பொறிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் முற்றாக அழியும் ஒரு நிலைக்கு வரும்வரை லண்டன் லாக் டவுனில் தான் இருக்கும் என்று பொறிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் அழும் கண்சர் வேட்டிவ் கட்சி, தற்போது 2 குழுக்களாக உடையும் நிலை தோன்றியுள்ளது என்கிறார்கள். Source: ‘Exit’ is a banned word: ‘Tentative’ Boris Johnson sides with Cabinet ‘doves’ who want restrictions until coronavirus is crushed as experts warn ANY lifting of measures ‘will see explosion in cases’

கொரோனா ஒரு முழு கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை, அது இனி பரவாது என்ற நிலை வரும் வரை நாம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். 2ம் முறை அது தாக்கினால் எம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற மன நிலையில் பொறிஸ் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மாறுபட்ட கருத்துகள் தற்போது தோன்றியுள்ளது. பிரிட்டன் தொடர்ந்தும் லாக் டவுனில் இருந்தால், பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று, பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Total Page Visits: 2068 - Today Page Visits: 2