கொரோனாவால் தொடரும் கொடுமை ! பெற்ற பிள்ளையை பார்க்காமல் உயிர்விட்ட இளம் தாய் !

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள ஹார்ட்லேண்ட்ஸ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின் மரணமடைந்துள்ளார்.

29 வயதான குறித்த தாய் கர்ப்பிணியாக இருக்கும் போதே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதனையடுத்து ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

ஆனால், குழந்தைக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டிருக்கவில்லை, இதனையடுத்து குறித்த தாய் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார்.

எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து  தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இரத்த உறைவு உருவாக்கி கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதனைடுத்து அவரது கணவரும் தந்தையும் தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்து அவரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பர்மிங்காம் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். குறித்த தாயின் உடல்நிலை காரணமாக,  தனது குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, இறப்பதற்கு முன் தனது குழந்தையின் புகைப்படங்களை மட்டுமே அவர் பார்த்துள்ளார்.


கேரளாவில் பரிதாபம்: 4 மாத கைக்குழந்தை கொரோனாவுக்கு பலி…

கேரள மாநிலத்தில் 4 மாத பச்சிளங்குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோ தொற்று தொடங்கிய  கேரளாவில், தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. அங்க இதுவரை 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 324 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம்  வயநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 4 மாத பெண் குழந்தைக்கு சில நாட்களாக காய்சசல் சளியாக அவதிப்பட்ட நிலையில், அந்த குழந்தைக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில், கொரோனா அறிகுறி உறுதியானது.

இதையடுத்து, கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று காலை அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தது.

இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  இதையடுத்து குழந்தை சிகிச்சை பெற்ற  இரண்டு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்த 5 டாக்டர்கள், செவிலியர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த குழந்தையின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Total Page Visits: 3217 - Today Page Visits: 3