அமெரிக்காவில் கொரோனவால் இறந்த மக்களை கொத்தாக புதைக்கும் அவலம் ! ரகசிய வீடியோ வெளியானது !

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் வெட்டி அடுக்கடுக்காகப் புதைக்கிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் வேறெந்தவொரு நாட்டையும்விட மிக அதிக அளவில் அமெரிக்காவில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இறந்தவர்களைத் தனித்தனியே அலங்கார சவப்பெட்டிகளில் வைத்துப் புதைப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை, ஆள்களும் இல்லை.

அமெரிக்காவில் கொரோனவால் இறந்த மக்களை கொத்தாக புதைக்கும் அவலம் ! ரகசிய வீடியோ வெளியானது !

எனவே, ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை வெட்டி மொத்தமாக சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்துப் புதைக்கிறார்கள்.

நியூயோர்க் நகரில் இறந்தவர்களில் ஏராளமானோரின் சடலங்கள், பிராங்ஸை ஒட்டியுள்ள ஹார்ட் தீவில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களைப் புதைக்கும் பகுதியில் பெரிய பள்ளங்களை வெட்டிப் புதைக்கின்றனர்.

சவக் குழியில் ஏணி வைத்து ஏறி இறங்குவதைக் காட்டுகிற – சவ அடக்கம் நடந்து கொண்டிருப்பது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் தற்போது வெளியாகி அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடத்தில்தான் ஆதரவற்றோர், இறுதிச் சடங்கைச் செய்ய இயலாத குடும்பத்தைச் சேர்ந்தோரின் உடல்கள் புதைக்கப்படுவது வழக்கம்.

படகில் மட்டுமே செல்லக் கூடிய இந்தத் தீவு கல்லறையில் மிகக் குறைவான ஊதியத்தில் சிறைக் கைதிகளே பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரையிலும் கொரோனா நோய்த் தொற்றால் 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4,68,895.

அமெரிக்காவில் 4 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 16 லட்சத்து 2 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 148 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 95 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலியை தொடர்ந்து அமெரிக்காவில் தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கோரோனா வைரஸ் அதிகம் பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 536 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் பட்டியலில் இத்தாலிக்கு (18 ஆயிரத்து 279 பேர்) அடுத்த படியாக அமெரிக்கா (16 ஆயிரத்து 691 பேர்) இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.