சீனாவுக்கு அடுத்த தலையிடி ! ஒரு கோடி மக்களை கொண்ட நகரை முடக்கிய கொரோனா ! அச்சத்தில் சீன மக்கள் !

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. மற்றொரு வுகானாக மாறிய சீன நகரம்… மொத்தமாக முடக்கியது சீனா… 28 நாள் தீவிர கண்காணிப்பில் ஒரு கோடி பேர்…

உலக நாடுகள் அனைத்திலும் பல உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பாதிப்பையும் மிக அதிக அளவில் ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பித்த போதிலும் அதன் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்து விட்டது என்று என்னும் இந்த நேரத்தில் தற்போது பிரச்சனை உருவாகியுள்ளது.

சுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சீனாவின் ஹார்பின் நகர் தற்போது கொரோனா பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீன நிர்வாகம் இந்த நகரை முடக்கியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து திரும்பிய 22 வயது மாணவன் ஒருவனால் சுமார் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, அண்டை நாடான ரஷ்யாவில் இருந்து திரும்பிய மக்களால் ஹார்பின் நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால், குடிமக்கள் அல்லாத வேறு எவரையும் ஹார்பின் நகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

மேலும், வேறு நகரங்களில் பதிவான வாகனங்களும் கூட ஹார்பின் நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஹார்பின் நகருக்குள் திரும்பியவர்களையும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

அவர்கள் 28 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு மூன்று விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மற்றொரு வுகானாக மாறிய சீன நகரம்… மொத்தமாக முடக்கியது சீனா… 28 நாள் தீவிர கண்காணிப்பில் ஒரு கோடி பேர்…

கொரோனா பரவலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சீன பத்திரிகையாளர்!.. திடீரென மாயமான பின்னணி..!

கொரோனா பரவலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சீன பத்திரிகையாளர்!.. திடீரென மாயமான பின்னணி..!

சீனாவில் உள்ள வுஹான் மாநகரில்முதலில் கொரோனா பரவுவதை அம்பலப்படுத்திய சீன பத்திரிக்கையாளர் 2 மாதங்களுக்கு மீண்டும் வெளியுலகத்துக்கு வந்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது.

அங்குள்ள ஒரு மீன் சந்தையில் வேலை பார்த்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது முதன் முதலாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த வைரஸ் அந்நாடு முழுமைக்கும் பரவியது. இதுவரை கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 3 ஆயிரத்துகும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வுஹான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வுஹானில் கொரோனா தொற்று பரவுவதை சீன பத்திரிகையாளரான லி ஜிஹுவா (Li Zehua) என்பவர் வீடியோ வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்தினார்.

இதனை அடுத்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் தோன்றிய அவர், தம்மை போலீசார் பிடித்துக் கொண்டுபோய் விட்டதாகவும், தடுப்பு காவலில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில் வெள்ளை காரில் போலீசார் அவரை துரத்தும் காட்சிகளும், வீட்டில் போலீசார் நுழையும் காட்சிகளும் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாது இவரையும் சேர்த்து மொத்தம் 3 சீன பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சீன பத்திரிகையாளர்!.. திடீரென மாயமான பின்னணி..!

Total Page Visits: 5950 - Today Page Visits: 2