கொரோனா தொற்றலின் புதிய அறிகுறிகள் இதுதானாம் ! அவதானம் மக்களே !

சுவை மற்றும் வாசனையை நுகர முடியாமையும் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்படுவோரின் நோய் அறிகுறிகள் எனவும் அண்மைய ஆராச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ஆராச்சியாளர்கள் சிலர் 200 க்கும் அதிகமான கொவிட் 19 தொற்றாளர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 67 சதவீதமானோர் சுவை மற்றும் வாசனையை நுகர முடியாதவர்களாக இருத்தாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் லண்டனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலும் இந்த விடயம் தெரியவந்தமை குறிப்பிடதக்கது.

கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் என்ன தாக்கம் இருக்கும் !

கொரோனா வைரஸின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளான நபர்கள், மீண்டும் வரும்போது அவர்களுக்கு பல்வேறு பின் விளைவுகள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவை என்ன என்பதனை பார்ப்போம்.

முதலில் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். மூச்சு எடுத்து விடுவதில் தொடர்ந்தும் பல மாதங்கள் சிறிதளவு சிரமம் இருக்கும். சிலருக்கு இதயம் பலவீனமாக காணப்படுவதோடு, நுரையீரலும் பலவீனமாக இருக்கும். மூட்டுகளில் அதீத வலி இருக்கும். பொதுவாக இடுப்புக்கு கீழ் இந்த வலி காணப்படும்.

மேலும் சிலருக்கு ஈரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். இவை அனைத்துமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட மனிதர்களுக்கு பொதுவாக காணப்படும் பின் விளைவுகள் ஆகும்.

மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை!

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளதா, இல்லையா என்பதை முதற்கட்டமாக பரிசோதித்து அறிவதற்கு உலக நாடுகள் பலவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்று அழைக்கப்படுகிற துரித பரிசோதனை கருவியை பயன்படுத்துகின்றன. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை விரைவாக கண்டுபிடிக்கலாம்.

ஆனால் சீனாவில் தயாரிக்கப்படுகிற இந்த கருவி ரூ.750-க்கு அதிகம், தென்கொரியாவில் தயாரிக்கப்படுகிற கருவி ரூ.350-க்கு அதிகம் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அங்கமான சி.எஸ்.ஐ.ஆர். என்னும் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டிகிரேடிவ் பயாலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் மிகவும் மலிவான ஒரு சோதனை முறையை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் கொரோனா நோய் கிருமிகளை கண்டறிய விலை உயர்ந்த எந்தவொரு எந்திரமும் தேவைப்படாது. இந்த மலிவு கட்டண முறைக்கு மறைந்த திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேயின் கதைகளில் வருகிற துப்பறியும் பாத்திரமான பெலுடாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டிகிரேடிவ் பயாலஜி இன்ஸ்டிடியூட் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறியதாவது:-

இந்தப் பரிசோதனை முறையும் தற்போது வழக்கத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் முறையைப் போன்றதுதான். ஆர்.என்.ஏ.வை பிரித்தெடுத்து, டியோக்ஸரிபோனுகிளரிக் அமிலமாக மாற்றும் முறைதான். ஒரு காகிதத்தில் புதுமையான வேதியியலைப்பின்பற்றி இந்த பரிசோதனை செய்யப்படும்.

பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்வது போல ஒரு மணி நேரத்தில் இதில் முடிவு வந்து விடும். இந்த சோதனை முறை கண்டறிந்து இருப்பவர்கள் எங்கள் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தேபஜோதி சக்கரவர்த்தியும், சவிக் மைத்தியும் ஆவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சோதனை முறை, நடைமுறைக்கு வருகிறபோது நிறைய பேருக்கு குறைவான செலவில் பரிசோதனை செய்வதற்கு வழிபிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 2892 - Today Page Visits: 2