பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளின் தாயும் கொரோனாவால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

அந்த குழந்தைகளுக்கு 13 வயதே ஆகியுள்ள நிலையில், அவர்களை விட்டுப்பிரிய வேண்டிய நிலை இவருக்கு எற்பட்டுள்ளது.

Shabnum Sadiq (39) பிரித்தானியாவின் Slough பகுதியில் லேபர் கட்சி சார்பில் கவுன்சிலராக பணியாற்றி வந்தார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக Shabnum பாகிஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

24 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க திணறிவந்த நிலையில், திங்களன்று அவர் உயிரிழந்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, Shabnum ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவர்களுக்கு இப்போது 13 வயது ஆகும் நிலையில், இந்த இரக்கமற்ற கொரோனா, தாயையும் பிள்ளைகளையும் பிரித்துவிட்டது.

கொரோனாவால் பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண் உயிரிழப்பு !

கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களும் பலியாகி வருகின்றனர்.

பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர், தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட பச்சிளம் குழந்தை !

இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சிகிச்சை பலனின்றி இதுவரை 89,975 பேர் உயிரிழந்துள்ளனர். 340,521 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17669 ஆக உள்ளது. இதனிடையே மார்ச் 18 அன்று தெற்கு நகரமான பாரியில் உள்ள மருத்துவமனையில் தாயும் இரண்டு மாத குழந்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நாட்டின் மிகக்குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸிலிருந்து மீண்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 5797 - Today Page Visits: 1