அமெரிக்காவுக்கு இனி வரும் இரு வாரங்கள் ஆபத்தானது ! அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை !

எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் வேதனையானது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்து வரும் வாரங்களில் அமெரிக்காவில் இடம்பெறவிருக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவே அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸுடன் போராடும் அமெரிக்க உயர்மட்ட விஞ்ஞானிகள் கொரோனா கொடிய நோய்க்கிருமி 100,000 முதல் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளதை ஆதாரமாக வைத்து ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விட்டுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸ் 100,000 முதல் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

சமூக இடைவெளியை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள், பாடசாலைகளை மூடுதல், பெரிய கூட்டங்களை தடைசெய்தல் , மற்றும் மக்களை தங்கள் வீடுகளில் தங்கும்படி கட்டாயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கிறது அமெரிக்க அரசு.

அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோணி எஸ். ஃபோசி Dr. Anthony S. Fauci மற்றும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டத்தை ஒருங்கிணைக்கும் டாக்டர் டெபோரா எல். பிர்க்ஸ் Dr. Deborah L. Birx ஆகியோர் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளதாக த நிவ் யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிந்திய செய்தி

அமெரிக்காவில் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் செவ்வாயன்று அதன் இறப்பு எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையான 3,300 இறப்புகளையும் முந்தியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டோர் அமெரிக்காவில் அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன. நாளடைவில் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நியூயோர்க் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை திங்களன்று ஒரு நாளில் 250 க்கும் மேற்பட்டவர்களால் அதிகரித்துள்ளது.

இதுவரை நியூயோர்க் காவல் துறையின் 930 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது..

Total Page Visits: 227 - Today Page Visits: 3