பிரான்ஸ் நாட்டில் கொரோனாவை வென்ற 97 வயது பாட்டி ! இது தான் காரணமாம் !

மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக வந்துள்ள கொடிய உயிர்கொல்லி வைரசான கொரோனா, முதியவர்களை இலக்குவைத்து பலியெடுத்து வரும் நிலையில், 97 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவுடன் போராடி வென்றுள்ளார்.

மூதாளர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றுக்காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூதாளர்கள் உயிரிழந்துள்ளதோடு, பலரும் உயிருக்கு போராடிவரும் நிலையில், Nelly நெல்லி என்ற இந்த மூதாட்டி, கொரோனாவுக்கு சவால்விட்ட உயிர்தப்பியுள்ளார்.


பிரான்சின் EHPAD de Marly (près de Valenciennes – Nord பகுதியில் உள்ள மூதாளர் இல்லம் ஒன்றில் தங்கியிருக்க வேளை இவருக்கு கடந்த மார்ச் 18ம் நாள் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

காய்சல், சளி என தொடங்கிய தொற்று ஒரு கட்டத்தில் மூச்செடுப்பதற்கும் பெரும் சவாலாக மாறியிருந்ததாக இவரது 72 வயது மகள் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

தொடர்சியாக மூதாளர்களின் உயிரிழப்புகள் தமக்கு பெரும் கவலைiயும் அச்சத்தையும் தந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கும் மகள், ஒரு கட்டத்தில் சுவாச வழங்கி நீக்கப்பட்டு, அவர் இயல்பாகவே சுவாசிகத் தொடங்கியுள்ளார் என மருத்துமனையில் இருந்து சொல்லப்பட்டபோது அந்தகணம், தாய்க்கு கிடைத்த இன்னுமொரு வாழ்க்கை என மகள் குறிப்பிடுகின்றார்.

இயல்பாகவே தைரியம் நிறைந்தவர் என்றும், உலகப் போர்களை எல்லாம் தைரியத்துடன் கடந்து உயிர்தப்பியவர் என்பதோடு, தற்போதுதான் அவருக்கு சற்று ஞாபகமறதி (Alzheimer,) மெல்லமெல்ல வரத் தொடங்கியுள்ளதாகவும் மூதாட்டியின் மகள் தெரிவிக்கின்றார்.

நாமும் அந்த மூதாட்டியை வாழ்த்துவோமே !!

200 000 பரிஸ்வாசிகள் தலைநகரை விட்டு வெளியேறினர் !!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதார அவசரநிலைக் காலத்தில் 200 000 தலைநகர்வாசிகள் பரிசினை விட்டு வெளியேறிவிட்டனர் என புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

மார்ச் 9,10,11 மற்றும் மார்ச் 23,24,25 ஆகிய நாட்களில் வேறு பிராந்தியங்களில் உள்ள தமது இரண்டாம் வீடுகளை நோக்கிச் சென்றுவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 1.7 மில்லியன் பேர் தமது சொந்த பிராந்தியங்களுக்கு சென்று தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Total Page Visits: 5641 - Today Page Visits: 7