இந்தோனேசியா கிராமங்களில் சுற்றி திரியும் கொரோனா பேய்கள் ! வீடுகளில் முடங்கிய மக்கள் !

இந்தோனேசிய கிராமொன்று சமூகவிலக்கல் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான பேய்கள் போன்று வேடமிட்ட தொண்டர்களை பயன்படுத்துகின்றது . இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் உள்ள கெப்பு (Kepuh) கிராமத்தின் வீதிகளில் பேய் நடமாட்டம் உருவாகியுள்ளது.

வீதிகளின் பல இடங்களில் வெள்ளை உடையணிந்து வெள்ளை முகப்பூச்சுப் போட்டு உருவங்கள் அங்குமிங்கும் அலைகின்றன. கெப்பு கிராமத்தில் பிரபலமாக உள்ள பழங்கதைகளில் வரும் பேய்கள் போல் அவை வேடமிட்டுள்ளன.

வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய அவை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றன. கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவரும் வேளையில் மக்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவதாக அந்தக் கிராமத்தின் கொரோனா தடுப்பு தொண்டர்கள் கூறுகின்றனர்.

போச்சோங் (Pocong) எனப்படும் இந்தப் பேய்களைக் கதைகளில் கேட்டுப் பலர் அஞ்சுவதுண்டு. அதனால் அவற்றைப் பயன்படுத்த முடிவு செய்ததாக அவர்கள் கூறினர். அதற்காகக் காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இருக்கின்றனர்.

இறந்தவர்களை நினைவுபடுத்தும் இந்தப் பேய் உருவங்களைக் கண்டு, உயிருக்குப் பயந்து மக்கள் வீட்டுக்குள் இருப்பர் என்பது இவர்களது நம்பிக்கை.

இந்தோனேசியாவில் மக்களிடம் கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாக்க இடைவெளியைப் பின்பற்றும்படியும், சுகாதாரமாக இருக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாடு, முழுமையாக முடக்கப்படவில்லை.

அதனால், சில கிராமங்கள் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இது போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. வீடியோ இணைப்பு …

Facebook :-

Total Page Visits: 3881 - Today Page Visits: 1