மே மாத தொடக்கத்தில் ….இத்தாலி , பிரிட்டன் அரசுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை இது தானாம் !

அடுத்த மாதம் 3 ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின்னர் கொரோனாவுக்கு எதிரான 2 ஆம் கட்ட தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் 24 மணி நேரத்தில் 482 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 3491 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 175925 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இதுவரை வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ள அரசு தரப்பு, 2 ஆம் கட்ட தடுப்பு நடவடிக்கையாக, தொற்று பரவலை கண்டுபிடிக்க உதவும் புதிய செயலி உருவாக்கப்பட்டு 70 சதவிகித மக்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்படும் என கூறியுள்ளது.

மே மாதம் வரை பிரிட்டனில் முடக்க நிலை தொடரும்!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக பிரிட்டனின் முடக்க நிலை, மே 7 வரை தொடரும் என டொமினிக் ராப் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வரும் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் கடமைகளை தற்காலிகமாக மேற்கொள்ளும் வெளியுறவுத் துறைச் செயலாளர், தினசரி டவுனிங் ஸ்ட்ரீட்டில் ஊடக சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, பிரதமர் போரிஸ் ஜோன்சன்,பிரிட்டனின் இயல்பு வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை, கடந்த மார்ச் 23ல் அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒருமுறை நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் விதிகள் செயல்படுகின்றனவா என்பதை மதிப்பீடு செய்ய அமைச்சர்களின் ஆலோசனை பெறப்படுகிறது.

இன்று அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவான SAGE மற்றும் கோப்ரா அவசரக் குழுவைச் சந்தித்த பின்னர், பிரிட்டனின் முடக்கம் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்பதை, அரசாங்கத்தின் பிரதான வெளியுறவு செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எந்தவொரு மாற்றமும் அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவான SAGE மற்றும் கோப்ரா குழுவின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் மே 7 ஆம் திகதி முடக்கநிலை தொடர்பாக மதிப்பீடு செய்யப்படும். இந்தநிலையில் மே 8 ஆம் திகதி பிரிட்டனின் முடக்கம் நீக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Total Page Visits: 2656 - Today Page Visits: 4